தியானம் (ஆவணி 19, 2025)
கிறிஸ்த்துவை அறியும் மேன்மைகாக
பிலிப்பியர் 3:8
அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மை க்காக எல்லாவற்றையும் நஷ் டமென்று எண்ணிக்கொண்டி ருக்கிறேன்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த விசுவாசியொருவன், உத்தம உள்ளத்தோடு தேவனை சேவித்து வந்தான். அவன் நீதி நியாயத்துடன், தன்னுடைய வியாரத்தை நடத்தி, தானும் தன் குடும்பமும், தேவனை சேவிப்பதையே தன் வாழ்வில் முதன்மைபடுத்தி வந்தான். ஆண்டுகள் கடந்து சென் றதும், அந்த ஊரின் அதிகாரிகள், சட்டத்திலே சில மாற்றங்களை அமுல்படுத்தினார்கள். அதன்படி க்கு, தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக சில செயல்களுக்கு, அந்த ஊரிலுள்ள வியாபாரங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் உண்டாயிற்று. இல்லா விடில் அந்த ஊரிலே வியாபர த்தை நடத்த முடியாது என்று கட் டளை பிறப்பித்தார்கள். உத்தம உள்ளம் கொண்ட அந்த விசுவாசி யானவன், இந்த பூமியிலே என்ன நஷ;டம் வந்தாலும் நான் என் தேவ னாகிய கர்த்தரின் வார்த்தைக்கு விரோதமான செயல்களுக்கு உடன்பட மாட்டேன் என்று தன் மனதிலே தீர்மானம் செய்து கொண்டு, அந்த ஊரிலே இயங்கி வந்த அவனுடைய வியாபாரத்தின் கிளையை மூடிவி ட்டான். அதனால், அவனுக்கு பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், அவனோ, தேவனோடுள்ள உறவிலே மிகவும் உறுதியாய் இருந்தான். அவன் சாட்சியுள்ள கிரியையானது பலருக்கு பக்திவிருத்தி உண்டாக்கியது. சில வாலிபர்கள் தாங்களும் அவ்வண்ணமான தேவனு க்கென்று எழுந்து நிற்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்கள். பிரியானவர்களே, மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன் என்று ஒரு பாடலின் வரியானது அமைக்கப்பட்டுள்ளது. ஒரு விசுவாசி யானவன், தன் இருதயத்திலே எதை மாணிக்கமாக வைத்திருக்கின்றான் என்பது, அவனுடைய கனிகளினாலே உறுதி செய்யப்படும். சமரசமான வாழ்வு, தங்கள் சொந்த எண்ணங்களை அமுல்படுத்த, தங்கள் கிரியை களை நியாயப்படுத்த முயற்சி செய்தல், ராஜதந்திரமாக காய்களை நக ர்த்த வேண்டும் இப்படியான கூறிக்கொள்ளபவர்களுடைய மாணிக்கம் பரலோகம் அல்ல. கிறிஸ்துவை அறியும் மேன்மைகாக எதையெல்லாம் நஷ;டம் என்றும் குப்பையென்றும் விடமனதாய் இருக்கின்றீர்கள்? ஒவ் வொருவரும் தன்னைத்தான் ஆராய்ந்து பார்க்க முடியும். இருதயங்க ளை ஆராய்ந்தறிகின்ற தேவன், மனிதர்களுடைய மனதிலிருப்பவை களை அறிந்திருக்கின்றார். அந்த மனிதனுடைய பேச்சும், நடக்கைகளும், அவனுடைய மனதிலிருப்பவைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும்.
ஜெபம்:
நிலையற்ற உலகத்திலே வாழும் என்னை நிலையான பரலோ கத்திற்கு அழைத்த தேவனே, உமக்கு விரோதமாக நான் பாவம் செய்யா மல், மனிதர்கள் முன்னிலையில் உமக்கு சாட்சியாக இருக்க பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - தீமோ 6:12