தியானம் (ஆவணி 18, 2025)
பொருளாதார பெருக்கம்
லூக்கா 12:15
ஏனெனில் ஒருவனுக்கு எவ் வளவு திரளான ஆஸ்தி இரு ந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
ஒரு விசுவாசியானவனின், புதிதாக ஒரு வியாபாரத்தை ஆரம்பிக்கும்படி தன் மனதிலே தீர்மானம் செய்து கொண்டு, அன்று மாலையிலே, தேவனை நோக்கி: தேவனாகிய கர்த்தாவே, இந்த காரியம் உமக்கு சித்தம் இல்லையென்றால் என்னை தடுத்து நிறுத்தும் என்று ஜெபம் செய்துவிட்டு படுக்கைக்கு சென்றான். காலையிலே எழுந்து வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கு வேண்டிய ஆயத்தங்களை தீவிரமான செய்து, சில கிழமைக்குள் அவை யாவற் றையும் செய்து முடித்த பின்னர், வியாபாரத்தை திறந்து வைப்பத ற்காக, ஜெபம் செய்யும்படி ஊழியர்களை அழைத்து, வியாபாரத்தை தொடங்கினான். சில மாதங் கள் கடந்து சென்ற பின்னர், வியாபாரம் பெருக ஆரம்பித்தது. மிகவும் மகிழ்சியடைந்து, தேவனை ஸ்தோத்தரித்தான். சபையிலே சாட்சி பகர்ந்தான். அதிக காணிக்கைகளை கொடுத்தான். ஏழை எளியவர்களுக்கு உதவினான். இப்படியான, நாட்கள் கடந்து சென்றதும், அந்த வியாபாரத்தின் வளர்சியானது, அவன் முதலாவதாக தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடுவதற்கு தடையாக மாறிவிட்டது. இந்த இடத்திலே அவன் என்ன செய்ய வேண் டும்? சற்று இந்த சம்பத்தை சிந்தித்துப் பாருங்கள். அவன் வியாபாரத்தை ஆரம்பிக்கும் முன்னதாக எப்படியாக தேவ சித்ததை கேட்டான்? தேவனுடைய பதிலுக்காக காத்திருந்தானோ? அவனுடைய ஜெபம் எப்படிப்பட்டது? அவன் உலகத்திலுள்ள எல்லா ஏழைகளுக்கும் உதவி செய்து, தன் ஆத்துமாவை இழந்து போனால், அவன் பேரில் தேவன் பிரியமாக இருப்பாரோ? தன் ஆத்துமாவை தேவனிடத்தில் கொடுக்காத விசுவாசியினுடைய பெருந்தொகையான காணிக்கையிலே, அதை விரும்பும் ஒரு சில ஊழியர்கள் அவனை ஏற்றுக் கொள்ளலாம், ஆனால், நித்திய ஜீவனுக்கென்று அவனை அழைத்த தேவன், அவன் ஆத்துமா பாதாளத்தை நோக்கி போகும் போது, அழிந்து போகும் பணத்திலே பிரியமாக இருப்பாரோ? இல்லை. பிரியமான சகோதர சகோதரிகளே, முதலாவதாக தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும். எவைகள் கூட கொடுக்கப்படும்? விசுவாசிகள் மனதிலே தோன்றும் ஆசை இச்சைகள் அல்ல, அவர்களுடைய தேவைகள் சந்திக்கப்படும். பரம பிதா, தம்முடைய பிள்ளைகளுக்கு தேவையானவைகளை அறிந்திருக்கின்றார். எனவே, தேவனுடைய ராஜ்யத்தை முதன்மைப்படுத்தும்படி, தேவ சித்தம் உங்க்ள வாழ்வில் நிறைவேற இடங்க கொடுங்கள்.
ஜெபம்:
முடிவில்லாத ராஜ்யத்திற்காக என்னை அழைத்த தேவனே, என்னுடைய உணர்வுகளின்படி என் வாழ்க்கையை நடத்திஇ கண்ணிகளிலே சிக்கிவிடாதபடிக்கு, எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பிலி 3:11