புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 17, 2025)

உங்கள் பொக்கிஷம் எங்கே?

மத்தேயு 6:21

உங்கள் பொக்கிஷம் எங்கே யிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.


கடந்த சில நாட்களாக, கர்த்தர் மலைப்பிரசங்கத்திலே போதித்த உபவசத்தின் கருப்பொருளையும், உண்மையான உபவாசத்தின் வெளியர ங்கமாக பலனையும் குறித்து தியானித்து வந்தோம். இன்றைய நாட்களிலே தேவனாலே உண்டாகும் பலன், ஆசீர்வாதம் போன்ற வார்த்தைகள் விசுவாசிகள் மத்தியிலே கருத்து முரண்பாடுகளை உண்டாக் கியிருக்கின்றது. தேவனுடைய ஆசீர்வாதத்தை, செழிப்பின் உபதேசமாக மாற்றி, பொய்யான உபதேசங்களை தேவ உபதேசங்களாக மாற்றி, தங்களுக்கு பூழியிலே ஆதயமும், முடிவிலே பெரிதான பாதகமும் உண்டாகும்படி செய்து கொள்கின்றார்கள். பூமியிலே உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளை கெடுக்கும்: இங்கே கன்னமிட்டு திருடுவார்கள். பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களை சேமித்து வையுங்கள்: அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிதும் இல்லை: அங்கே திருடர் கன்னமிட்டு திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும் என்று யாவரும் புரிந்து கொள்ளகூடி யவிதமாக மிகவும் தெளிவாவும், திட்டமாகவும் ஆலோசனை கூறியிருக்கின்றார். இந்த உபதேசத்தை புரிந்து கொள்வதற்கு எத்தனை இலகுவானது! ஆனால், இறையியலிலே பாண்டித்தியம் பெற வேண்டும் என்று வேதாகம கலாசலைகளிலே கற்று, கலாநிதிப்பட்டம் பெற்ற சிலர், நித்திய ஜீவனை பிரதானமான நோக்கமாக கொண்டு கொடுக்கப்பட்ட வேத வார்த்தைகளை, தங்கள் ஆத்துமாவுக்கு கேடுண்டாக்கும்படி புரட்டுகின்றார்கள். பணம், பொருள், உலக ஆஸ்தி இவைகளை குறித்து ஆண்டவராகிய இயேசுதாமே பல சந்தர்ப்பங்களிலே மிகவும் தெளிவா கவும், திட்டமாகவும் யாவரும் விளங்கிக் கொள்ளகூடிய முறையிலே கூறியிருக்கின்றார். அவைகளை நாடித் தேடுகின்றவர்களுடைய வாழ்விலே அதனால் உண்டாகக்கூடிய கண்ணிகளையும், அந்த வழியிலே போகின்றவர்களுடைய பயங்கரமானதும், பரிதாபமுமான முடிவையும் குறித்தும் குறிப்பிட்டிருக்கின்றார். அதே வேளையிலே, அவைகளை குறித்து கூறிய இடங்களிலே மேலான பொக்கிஷ;களையும், அழியாத ராஜ்யத்தையும் குறித்தும் கூறியிருக்கின்றார். எனவே ஆண்டவராகிய இயேசு கூறிய ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பற்றிக்கொள் ளுங்கள் அப்பொழுது அவர் காட்டிய வழியிலே நடந்து கொள்வீர்கள்.

ஜெபம்:

நித்திய ராஜ்யத்திற்கென்று என்னை அழைத்த தேவனே, இந்த உலகத்தின்மேல் ஆசைவைத்து, அழிந்து போகின்றவைகளை பின்பற்றாதபடிக்கு, அழியாத மேன்மையானவைகளை தேட எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 12:15