புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 16, 2025)

வழிநடத்துதலுக்காக காத்திருத்தல்

அப்போஸ்தலர் 13:3

அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.


அந்தியோக்கியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் எனப் பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லுகீயும், காற்பங்கு தேசாதி பதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க் கதரிசிகளாயும் போதர்களாயும் இருந்தார்கள். அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து உபவாசித்துக் கொண்டிருறபோது பர்னபாவை யும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களை பிரி த்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவி யானவர் திருவுளம் பற்றினார். அப் பொழுது உபவாசித்து ஜெபம்ப ண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள். இந்த சம்பவத்தை அப்போஸதலர் நடபடிகள் 13 அதிகாரத்திலே வாசிக்கலாம். இந்த உபவாசமும் ஜெப மும், நம்முடைய ஆண்டவராகிய இயேசு, மரித்து, உயிர்த்து, பரம் மேறி, வாக்களிக்கப்பட்ட சத்திய ஆவியானவர் இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இன்று தங்கள் மனதில் தோன்றியபடி செய்ய விரும்புகின்றவர்கள், பரிசுத்த ஆவியா னவர் வந்த பின்னர் நாம் உபவாசிக்க வேண்டியதில்லை என்று தவறாக பேதித்து வருகின்றார்கள். நீங்கள் அவர்களுக்கு செவிகொடுத்து உங்கள் நாட்களை விரயப்படுத்தாமல், உங்களுக்குள் வாசம் செய்யும் ஆவியானவருக்கு செவி கொடுங்கள். ஒரு குறிப்பிட்ட தேவனுடைய ஆலோசனையைக் குறித்து மனம் கடினப்பட்டிருக்கும் போது, வேறொரு காரியத்திற்காக உபவாசித்து ஜெபிப்பதில் என்ன பலன்? தேவன் கூறிய ஒரு காரியத்தை செய்ய முடியாமல் இருந்தால், உபவாசத்திற்கு செல் லும் போது, உங்கள் உண்மையை நிலையை தேவனிடத்தில் தெரியு ங்கள். உங்கள் மனக்கடினத்தை தேவ சமுகத்திலே மனக்கடினம் என்று ஏற்றுக் கொள்ளுங்கள். சுயநீதியை நாடாமல், தேவ நீதி புரிந்து கொள்ளும் மனதை தரும்படி வேண்டிக் கொள்ளுங்கள். அப்படியாக உண்மை மனதுடன் தேவனை நோக்கிப் பார்க்கும் போது, அவருடைய சமுகத்திலே பிரியமான உபவாசமாக காணப்படும். உபவாசம் என்பது எப்போதும் புலம்பலுக்காக அல்ல. சில வேளைகளிலே, தேவ வழிநட த்துதலுக்காக விசுவாசிகள் காத்திருக்க வேண்டும். உபவாசமானது, விசுவாசிகள் தேவனுடைய வேளைக்காக காத்திருக்கும்படிக்கு இன்னும் அதிகமான மனஉறுதியை கொடுக்கும். எனவே, மனத்தாழ்மையோடு, கீழ்படிவோடும் தேவனிடத்திலே சேருங்கள். அவர் உங்களை வழிநட த்திச் செல்வார்.

ஜெபம்:

காலங்களையும் நேரங்களைம் அறிந்த தேவனே, நான் என் சுய அறிவிலே காரியங்களை நடப்பிக்க துணிகரம் கொள்ளாதபடிக்கு, உமக் காக காத்திருக்க எனக்கு உணர்வுள்ள இருயதத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - அப் 14:23