தியானம் (ஆவணி 15, 2025)
வழிநடத்தும் சத்திய ஆவியானவர்
யோவான் 16:13
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;
இந்த உலகத்திலே ஆலயங்கள் சபைக் கட்டடிடம் தேவையில்லை, தசம பாகம் காணிக்ககைகள் அவசியமல்ல, ஆண்டவர் இயேசு சீக்கிரம் வந்துவிடுவார் என்று தவறாக பிரசங்கித்து திரிகின்றவர்கள், தங்களு க்கும் தங்கள் சந்ததிக்கும் என்று வீடுகளை கட்டி, தனிப்பட்ட வியா பாரங்களை ஆரம்பித்து, பங்கு சந்தையிலே முதலீடுகளை செய்து, சொத்துக்களை சேகரித்து வைக் கின்றார்கள். இப்படிப்பட்ட பொய் யான உபதேசங்களோடு கூட, உப வாசம் அவசியமானதல்ல என்றும் கூறிக்கொள்கின்றார்கள். மனசாட்சி யிலே சூடுண்டுவர்களுடைய சத்த த்தை நீங்கள் கேளாமல். சத்திய வேதத்தை ஆராய்ந்து அறியும்படி, சத்திய ஆவியானவருக்கு இடங்கொடுங்கள். அக்காலத்திலே, ஆண்ட வராகிய இயேசு இந்த உலக த்திலே வாழ்ந்த நாட்களிலே, யோவான் ஸ்நானனுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம் பண்ணி வந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவனுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவா சிக்கின்றார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருப்பதென்னவென்று கேட்டார்கள். அதற்கு இயேசு: மணவாளன்; தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசி ப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்க மாட்டார்களே. முணவாளன் அவர்களைவிட்டு எடுபடும் நாட்கள் வருட் அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்று பதிலளித்தார். அதாவது, உபவாசிப்பது ஒரு மதச்சடங்கு அல்ல. மற்றவர்கள் செய்கின்றார்கள் அதனால் நாங்களும் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தின்படி உபவா சிப்பது தேவனுக்கு ஏற்புடையதல்ல. விசுவாசிகள் உபவாசிப்பதற்கு காலமும் நேரமும் காரணமும் உண்டு. நான் உபவாசிக்கின்றேன், என் சபையோரில் சிலர் உபவாசிப்பதில்லை என்று ஒரு விசுவாசி எண்ணம் கொள்ளும்போது, உபவாசமானது அந்த விசுவாசியின் வாழ்விலே ஒரு சடங்காரச்சாரமாக மாறிவிடுகின்றது. முதலாவதாக, அப்படிப்பட்ட மனநி லையானது தேவ பிள்ளைக்குரிய சுபாவமாக இருக்கமுடியாது. விசு வாசிகள்;, சத்திய ஆவியானவர் கிரியைகளை நடப்பிக்க தங்களில் இடம் கொடுக்கும் போது, அவர் தம்முடையவர்களை சகல சத்திய த்திலும் நடத்திச் செல்வார். எனவே, குறித்த காலத்திலே பரிசுத்த உப வாசநாளை நியமித்து, தேவ சமுகத்திலே உங்களை தாழ்த்தி, கருத்N தாடு அவருடைய பாத்திலே ஜெபத்திலும், தியானத்திலும் தரித்திருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
ஜெபம்:
நான் நடக்க வேண்டிய வழியை எனக்கு போதிக்கின்ற தேவனே, நான் எந்த காரியத்தையும் சடங்காச்சாரமாக, மற்றவர்கள் காணும்படி செய்யாமல், கருத்தோடு உம் சித்தப்படி செய்ய எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 6:16-17