புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 14, 2025)

கர்த்தருக்கு பிரியமான உபவாசம்

ஏசாயா 58:10

பசியுள்ளவனிடத்தில் உன் ஆத் துமாவைச் சாய்த்துஇ சிறுமை ப்பட்ட ஆத்துமாவைத் திருப் தியாக்கினால்இ அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதி த்துஇ உன் அந்தகாரம் மத்தி யானத்தைப்போலாகும்.


உபவாசத்தின் கருப்பொருளைக் குறித்து நாம் ஆராய்ந்து தியானித்து வருகின்றோம். தேவனாகிய கர்த்தருக்கு பிரியமான உபவாசம் எது? அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்க ளை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலை யாக்கி விடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும் உபவாச த்தின் நோக்கதம்திற்குள் அடங்கியிருக்க வேண்டும். முதலாவதாக இது சர்வ உலகத்தை குறித்ததாகவோ, மற்றும் தேசம், ஊர், சமுகம், சபை, குடும்பம் போன்றவற்றை குறித்த தாகவோ இருப்பதற்கு முன்தாக, நம்மை குறித்ததாக இருக்க வேண் டும். எடுத்துக்காட்டாக, ஒரு விசு வாசியானவன், தேவனுக்கு விரோ தமான அக்கிரமமான செயல்க ளை தன்னில் வைத்துக் கொண்டு, மற்றவர்களுகடைய அக்கிரமங்க ளுக்காக உபவாசிப்பது கருதற் றதாக இருக்கும். ஒடுக்கபட்ட மனிதனொருவனை ஆதரித்து விடுதலை யாக்கும்படிக்கு சரீர பெலனும் நிர்வாகமும் இருக்கும் போது, அந்த மனித னுடைய விடுதலைக்காக விசுவாசியொருவன் உபவாசித்துக் கொண்டிருந்தால், அந்த விசுவாசியைக் குறித்து நீங்கள் என்ன கூறு வீர்கள்? ஒவ்வொரு நாளும் அதிக நேரம் ஜெபித்து, வாரந்தோறும் உப வாசித்து தேவ சமுகத்திலே இருக்கின்ற ஒரு விசுவாசியானவன், சிறு மைப்பட்டவர்கள், வறியவர்கள், திக்கற்றவர்களுக்கு தன் இருதயத்தை அடைத்துக் கொண்டால், அவன் கிறிஸ்தவ பண்புடையவன் என்று கூற முடியாது. எனவே, பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடு க்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள் ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு உகந்த உபவாசமாக இருக்கும். நல்ல மரமானத நல்ல கனியைக் கொடுப்பது அதன் இயற்கை சுபாவ மாக இருக்கின்றது. அதுபோல, தேவனுக்கேற்ற நன்மைகளை நடப்பிப்து தேவ பிள்ளைகளின் சுபாவமாக இருக்க வேண்டும். ஆனால், இன்று பொருளாதார மலர்ச்சியைக் கண்டிருக்கும் சிலரோ, தங்கள் சந்ததிக் கென்று ஆஸ்திகளை சேர்த்து வைத்துவிட்டு, ஏழை எளியவர் களுக்கு உதவுவதற்கு, தேவ சித்தத்தை தேடுகின்றார்கள். தேவன் பலியையல்ல இரக்கத்தை மேன்மைப்படுத்துகின்றார் என்பதை மறந்து விடாதிருங்கள்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, நான் பக்தியுள்ளவ னென்று எண்ணி, நீர் என்மேல் காண்பிக்கும் இரக்கத்தை மற்றவர்களுக்கு காண்பிக்க மறக்காதபடிக்கு, உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 2:14-17

Category Tags: