தியானம் (ஆவணி 13, 2025)
தேவ இரக்கத்தை அறிந்தவர்களே!
சங்கீதம் 103:8
கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
யோனா என்னும் தீர்க்கதரிசியின் நாட்களிலே, தேவனாகிய கர்த்தர்தாமே புறஜாதியரான நினிவே பட்டணத்தாருக்கு அவர்களுடைய அக் கிரமம் மிகுதியாகிவிட்டது என்றும் அதனால் உண்டாகப்போகும் அழிவை குறித்த செய்தியை அனுப்பினார். இன்னும் நாற்பதுநாள் உண்டு. அப்பொழுது நினிவே கவிழ்த்துப்போடப்படும் என்று யோனா தேவ செய்தியை புறஜாதி யாராகிய அந்த பட்டணத்தா ருக்கு தெரியப்படுத்டதினான். அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்ப டிக் கூறினார்கள்; பெரியோர் முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள். இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியி ருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான். மேலும் ராஜா, தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக, நினிவேயிலெங்கும் மனுஷரும் மிருகங்களும், மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும், மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவு ங்கடவர்கள். யாருக்குத் தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒரு வேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தை விட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான். அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய் வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார். தேவனையும் அவருடைய கிருபை இரங்க ங்களை அறிந்த தேவபிள்ளைகளே, புறஜாதியாராகிய அவர்கள் தேவன் மனஸ்தாபப்பட்டு, தங்களுக்கு இரங்குவார் என்று, தங்களை தாழ்த்தி உபவாசித்தார்கள். காரியம் அப்படியானால், தேவனையும் அவருடைய மகத்துவமுள்ள செயல்களையும் அறிந்த நாம், இன்னும் அதிகமாய் நம்மை தேவ சமுகத்திலே தாழ்த்தி, நம்முடைய வழிகளை அவருக்கு ஒப்புக்கொடுத்து, உபவாச நாட்களை ஏற்படுத்தும்போது, அவர் நமக்கு செவிகொடுப்பது அதிக நிச்சயமல்லவா? எனவே, உபவாசத்தின் கருப்பொருளை உணர்ந்தவர்களாக, உபவாச நாட்களை நியமிக்கக்கடவோம்.
ஜெபம்:
மருதுருக்கமுள்ள தேவனே, நான் எப்போதும் உம்முடைய சத்தத்தை கேட்டு, என் வழிகளை உம்மிடத்தில் ஒப்படைத்து, மனத்தாழ்மையோடு உம்மிடத்தில் சேர எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோனா 3:8