புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 12, 2025)

ஆராய்ந்து திரும்புங்கள்

புலம்பல் 3:40

நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.


இன்றைய நாட்களிலே பொதுவாக விசுவாசிகள் எதற்காக உபவாசிக்கின்றார்கள். தங்கள் வேலை பிள்ளைகளுடைய கல்வி, வேலை, திருமணம் மற்றும் நாட்டின் சமாதானம், ஊழியங்களிலே முன்னேற்றம் மற்று சரீர சுகம் போன்றவை சில உதாரணங்ளாக இருக்கின்றது. எந்த ஒரு நிகழ்வைக் குறித்தும் நாம் தேவனிடத்திலே விண்ணப்பித்து காத்திருப்பது நல்லது. ஆனால், அந்த காத்திருப்பானது நான் விரும்பிய காரியம் ஆக வேண்டும். அதை தேவன் ஏற்றுக் கொண்டு அங்கீகரித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையோடு இருக்கக்கூடாது. மாறாக, தேவ சித்தமானது நம்முடைய வாழ்க்கையிலே நிறைவேறும்படிக்கான காத்திருப்பாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு பிள்ளையானது, தான் நினைத்த காரியத்தை பெற்றோர் அனுமதிக்கும் வரைக்கும், தன்னுடைய அறையிலிருந்து வெளியே வரமாட்டேன், எதையும் சாப்பிடமாட்டேன் என்று அறை வீட்டிற்குள் காத்திருப்தை முரட்டு பிடிவாதம் என்று கூறலாம். அவ்விதமான நான் நினைத்த காரியம் ஆகும் வரைக்கும் தேவனை நோக்கி, உபவாசித்து காத்திருப்பேன் என்று கூறுவது தன்னைமத் தான் சேதப் படுத்திக் கொள்வதாக முடியும். தேவன்தாமே, நான் இந்த உலகத்தின் போக்கிலே சென்று கெட்டுப்போகமல், நித்திய ஜீவனை அடையும்படிக்கு தம்முடைய குமாரனாகிய இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். எனவே, கல்வி, வேலை, திருமணம் போன்ற எந்த காரியங்களும் நம்மைக் குறித்த தேவனுடைய அநாதி தீர்மானத்தினின்று நம்மை விலக்கு போடுமாக இருந்தால், அவை தேவனால் உண்டானது என்று கூற முடியாது. இந்த உலகத்தின் காரி யங்களுக்காக, மற்றவர்களுக்காக, ஊழியங்களுக்காக, தேசத்திற்காக விசுவாசிகள் உபவாசிக்கின்றார்கள். அப்படியானால், தங்கள் வழிகளை தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும்படி எவ்வளவு அதிகமாக தேவனிடத்திலே காத்திக்க வேண்டும்? பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நன்மைகள் என்று தாங்கள் நினைக்கும் காரியங்களை அவர்களுக்கு கொடு க்கின்றார்கள். இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும் என்று பிரயாசப்படுகின்றார்கள். அப்படியானால், பரம பிதா எவ்வளவு அதிகமாக நன்மையான ஈவுகளை நமக்கு கொடுப்பபார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். எனவே, இந்த உலகத்தின் காரியங்களை நோக்கி முன்னேறாமல், பரலோகம் சென்றடைவதற்குரிய காரியங்களை வாஞ்சித்து நாடு ங்கள்.

ஜெபம்:

என்னை அழிவிலிருந்து மீட்டுக் கொண்ட தேவனே, காலங்கள் உமது கரங்களிலே உண்டு. எனவே நான் அழிவுக்குரிய காரியங்களை பெற்றுக்கொள்ளும்படி பிடிவாதம் கொள்ளாதபடிக்கு என்னை காத்துக் கொள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 139:23