புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 11, 2025)

பூரண அர்ப்பணிப்பு

ஏசாயா 58:3

இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலை களையெல்லாம் கட்டாயமா ய்ச் செய்கிறீர்கள்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த இரண்டு விசுவாச குடும்பங்களுக்கிடை யிலே, ஒரு குறிப்பிட்ட காரியத்தைக் குறித்த மனக்கசப்பு ஏற்பட்டால், அவர்களுக்கிடையிலே பிரிவினை உண்டாயிற்று. ஒரு குடும்பத்தின் தலை வன் மற்றய குடும்ப தலைவனை நோக்கி: நான் முழங்காற்படியிட் டேன் என்றால் என்ன நடக்கும் என்று தெரியுமா என்று கடுமையாக பேசி னான். பிரியமானவர்களே, இந்த சம்பத்தை சற்றி சிந்தித்துப் பாருங் கள். தன்னை விசுவாசி என்று பல வருடங்களாக எண்ணிக் கொண்ட அந்த மனிதனானவன், தேவனை யும் அவருடைய வழிகளையும் அறி யாதவனாக வாழ்ந்து வந்தான். மன்னிப்பு, ஒப்புரவாகுதல், சமா தானம் செய்தல், கோபம், பகை, வன்மம் கசப்புக்களினால் ஏற்ப டும் பின்விளைவுகள், துன்பப்படு த்துகின்றவர்;க்காக ஜெபியுங்கள், உங்கள் எதிரிகளை நேசியுங்கள், நாவ டக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள், நீடிய பொறுமையுள்ளவர்களா யிருங்கள் என்று அநேக ஆலோசனைகள் தரும் வேத வார்த்தைகள் யாவற்றையும் மறந்து, தன்னை நீதிமான் என்று காண்பிக்கும்படி நான் முழங்காற்படியிடுவேன் என்று அகங்காரமான பேசிக் கொண்டான். இப்படியாக சிலர், தங்கள் வன்மம், பகை, கோபம், பொறாமை, முரட்டு வைராக்கியம், மனபக்கடினம் போன்ற மாம்ச இச்சைகளை மனதிலே வைத்துக் கொண்டு, என் சரீரத்திற்கு தேவையான உணவை உண்ணா மல், என் சரீரம் விரும்பும் தண்ணீரை பருகாமல், அவைகளை ஒறுத்து உபவாசம் இருப்பேன் என்று கூறினால், அதை குறித்து நீங்கள் என்ன கூறுவீர்கள்? அது தேவனுடைய பார்வையிலே ஏற்புடைய உபவாசமாக இருக்குமோ அல்லது அது உண்ணா விரதமாக முடியுமோ என்பதை அவனவன் ஆராய்ந்து அறிந்து கொள்வது நல்லது. நித்திய வாழ்விற் கென்று அழைக்கப்பட்ட தேவ பிள்ளைகளே, நாம் முற்காலங்களிலே செய்து வந்த பழைய சடங்காச்சாரங்களைவிட்டு, தேவ சமுகத்திற்கு வரும்போது, நருங்குண்டதும், நொருங்குண்டதுமான இருதயத்தோடு வர வேண்டும். மனம்வருந்தி, மனந்திரும்புகின்ற இருதயத்தை தேவன் புறக்கணிக்க மாட்டார். விசுவாசிகளுடைய உபவாசமானது, வழக்கு க்கும் வாதுக்குரியதாக இருக்காமல், தேவ வழிநடத்துதலை பெற்றுக் கொள்ளும்படிக்கு, பூரண அர்ப்பணிப்புள்ளதாக இருக்க வேண்டும். அவைகளிலே தேவன் பிரியமாக இருக்கின்றார்.

ஜெபம்:

உம்முடைய சித்தத்தை செய்ய என்னை அழைத்த தேவனே, என் வழியை உமக்கு ஒப்புவித்து, உம்முடைய வழிநடத்துதலுக்காக காத்திருக்கும்படிக்கு எனக்கு நீடிய பொறுமையை கற்றுதந்து வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 51:17