புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 10, 2025)

தேவன் உங்களோடு பேசியவைகள்

1 சாமுவேல் 15:22

பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.


ஒரு பண்ணையின் முதலாளியானவனின் குமாரனொருவன், தன் தந்தையின் வயலிலே அதிகமாக பிரயாசப்பட்டு உழைத்து வந்தான். தந் தையானவர், அவன்மேல் பிரியமாக இருந்தார். நாட்கள் கடந்து சென் றதும், அந்த குமாரனானவன், சில தகாத நட்புகளை ஏற்படுத்திக் கொண்டு, அவ்வப்போது, அவர்களோடு சென்று, மதுபானம் அருந்தி, நேரத்தை செலவிட ஆரம்பித்தான். அதை கண்டு மனம் நொந்து போன தந்தை யானவர், அவனை அழைத்து, அவ னோடு அன்பாக பேசினார். மகனே, நீ துன்மார்க்கமாக நடக்கின்ற நண் பர்களை தெரிந்து கொண்டிருக்கி ன்றாய். இது வேதனைகளுக்கு ஆரம்பம், இப்போதே அவர்களை விட்டு விலகிவிடு. இல்லாவிடில் நீ துன்பப்படும் நாட்களை உனக்கு நீயே உண்டாக்கி கொள்வாய் என்றார். அதற்கு அவன், தந்தையே, நான் மாதத்திலே ஒருமுறை சென்று மட்டாக மதுபானம் அருந்துவதில் என்ன தவறு. எல்லா நிலைமைகளையும் அறிந்து, யாவற்றையும் கட்டுப்பாட்;டிற்குள் வைத்திருக்கின்றேன் என்று கூறி, வயலிலே வேலை செய்ய சென்று விட்டான். பண்ணையிலே, தந்தையானவர், தன்னிட த்தில் கேட்காத அநேக வேலைகளை மிகவும் சிரமப்பட்டு, சீக்கரமாக செய்து முடித்துவிடுவான். ஆனால், அவனை உண்மையான நேசித்து வந்த அந்த தந்தையானவர், தன் குமாரனை சந்திக்கும் போது, அவனுடைய பிரயாசங்கiளை குறித்து பாராட்டினாலும், அவையாவும் பலனற்று போய்விடப் போகின்றது என்று மனவேதனையடையாமல் இருப்பாரோ? அவனுடைய வழிகளை குறித்து பிரியமாயிருப்பாரோ? தன் குமாரனானவன் துன்மாரக்க வழியை தெரிந்து கொள்ளும்போது, தன் வயலிலே வியாபாரம் பெருவதில் மேன்மையடைவரோ? சிந்தித்துப் பாருங்கள்! அந்த குமாரனைப்பற்றியல்ல, உங்கள் வழிகளை குறித்து ஆராய்ந்து பாருங்கள். தேவன் ஒருகாரியத்தை பல வருடங்களுக்கு முன் கூறியிருந்தும், அதை செய்யாமல், உபவாசத்திலும் தரித்திருந்து, தேவனே பேசும் என்று கேட்கும் போது, அவர் என்ன பேசுவார்? புதிய காரியத்தை கூறுவரோ? அவர் முன்பு உங்களோடு பேசியதை ஞாபக ப்படுத்துவாரோ? ஒருவேளை அது, களியாட்டத்திற்குரிய பாவமாகவோ அல்லது வன்மம், கசப்பு, மன்னிக்க முடியாதிருக்கும் நிலைமை யாக வோ இருக்கலாம். அது எதுவாக இருந்தாலும், நாம் உபவாசிக்க முன்பு தேவன் கூறிய காரியத்தை செய்ய நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, என் சொந்த கிரியைகள் வழியாக நான் உம்மை பிரியப்படுத்த முயற்சிக்காமல், உம் மு டைய வார்த்தையின் வழியிலே வாழ என்னை கரம்பிடித்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எரேமியா 14:10-12