தியானம் (ஆவணி 09, 2025)
தேவ சத்தத்திற்கு செவிகொடுங்கள்
ஏசாயா 58:5
மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக் கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயி ருக்குமோ?
ஏசாயா தீர்க்கதரிசியின் நாட்களிலே, தேவனால் தெரிந்து கொள்ளப்ப ட்ட ஜனங்களை தேவனை நோக்கி நாங்கள் உபவாசம் பண்ணும் போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமா க்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன? என்று தங்கள் உபவாச நாட்களை குறித்து தேவனிடம் முறையிட்டார்கள். அவ ர்கள் நியாயத்தைவிட்டு விலகாமல் நீதியைத் செய்து வருகிற ஜாதியாரை ப்போல் அவர்கள் நாடோறும் தேவ னைத் தேடி, அவர் வழிகளை அறிய விரும்பினார்கள். நீதி நியாயங்களை அவரிடத்தில் விசாரித்து தேவனிட த்தில் சேர விரும்பினார்கள். இது அவர்கள் தங்களை குறித்து தாங் கள் கொண்டிருந்த எண்ணமாக இரு ந்தது. ஆனால், தேவனாகிய கர்த் தரோ, அவர்களுடைய உண்மை நிலைமையை தீர்க்கதரிசி வழியாக அவர்களுக்கு கூறினார். சத்தமிட் டுக் கூப்பிடு: அடக்கிக் கொள்ளாதே, எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர் கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்கi ளயும் தெரிவி. இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச் சைகளின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கின்றீர்கள். இதோ வழக்குக்கும் வாதுக்கும் துஷ;டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதிற்கும் உபவாசிக்கின்றீர்கள்: நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளிலே உப வாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள். மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணைப்போல இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக் கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாசநாளாயிரு க்குமோ இதையா உபவாசமென்றும் கர்த்தருக்கு பிரியமான நாளென் றும் சொல்லுவாய்? என்று அவர்களுடைய உபவாச நாட்களைக் பரிதா பமான நிலைமையை எடுத்துக் கூறினார். பிரியமானவர்களே, தேவ னாகிய கர்த்தர் உங்கள் சுத்தமனசாட்சியிலே உணர்த்திய காரியத்தை, பின்னர் செய்வேன் என்று அதை தள்ளிவிட்டு, இப்போது ஏழு நாள் உப வாசிப்பேன் அல்லது நாற்பது நாள் இரவு உணவு மட்டும் உண்ணுவேன் என்பது தேவனுக்கு பிரியமாக இருக்குமோ? இல்லை! முதலாவதாக, தேவன் சொன்ன காரியத்தை செய்யும்படி உங்களை தேவ சமுகத்திலே தாழ்த்தி ஒப்புக் கொடுத்து, அதை செய்து முடிக்க தேவ பலத்தை நாடுங்கள். அப்பொழுது அவர் உங்கள் வழிகளிலே பிரியமாக இருப்பார்.
ஜெபம்:
வார்த்தையை அனுப்பி என் வழிகளை உணர்த்தும் ஜீவனுள்ள தேவனே, உம் வார்த்தையை நான் அற்பாக எண்ணாதிருக்க, எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து, உம் வழியிலே நடக்க என்னை பெலப்ப டுதுவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கின்றேன் ஆமென்.
மாலைத் தியானம் - எரேமியா 36:9