புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 08, 2025)

மனத்தாழ்மையோடு உபவாசியுங்கள்

மத்தேயு 6:16

அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்;


பழைய ஏற்பாட்டு நாட்களிலே, தேவ ஜனங்கள் தங்கள் பாவங்களினால் உண்டான அவல நிலையை உணர்ந்து கொள்ளும் போது, தாங்கள் வழமையாக உடுத்திக் கொள்ளும் வஸ்திரங்களுக்கு பதிலாக இரட்டு த்திக் கொள்வார்கள். அதாவது சாக்கு துணியை அணிந்து கொண்டு, தங்கள் தலையிலே புழுதியை அள்ளி கொட்டிக் கொண்டு, உபவா சத்தோடும் காத்திருப்பார்கள். இரட்டுத்துதலும், புழுதியை அள்ளி கொட்டுவதும், உபவாசமும் அவர்க ளுடைய மனத்தாழ்மையை பிரதப லித்தது. அப்படியாக உண்மையான மனதோடு, இரட்டுத்தி, புழுதியை அள்ளிக் கொட்டி, உபவாசத்தோடு மனந்திரும்பி தேவனை நோக்கி பார் த்ததவர்கள் தேவ இரக்கத்தை பெற் றுக் கொண்டார்கள். ஆனால், ஒரு வன் வெளிவேடமாக, இரட்டை உடு த்துக் கொள்ள முடியும். மற்றவர்கள் காணும்படி புழுதியை அள்ளி தன் தலையிலே கொட்டிக் கொள்ள முடியும். உபவாசத்தோடு தேவ சமுக த்திலே ஜெபிக்க முடியும். அந்த மனிதனின் மனதிலே உண்மை யான மனந்திரும்புதல் இல்லாதிருக்கும் போது, அவனுடைய கிரியைகளால் தேவனிடத்தில் பலன் ஒன்றுமி ராது. கர்த்தர் இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலும், பரிசேயர்கள் வாரத்தில் இரண்டு தரம் உபவாசித்து வந்தார்கள். அவர்கள் உபவாசிக்கும் போது, அதை யாவரும் காணும்படி செய்து வந்தார்கள். அத னால், அவர்கள் தங் களை தேவ பக்தியுள்ளவர்கள் என்று காட்டிக் கொண்டார்கள். அப்ப டியானால், நாம் உபவாசிக்கும் போது, ஒருவரும் அறியாமல் இரகசி யமாக செய்ய வேண்டுமோ? தற்செயலாக ஒருவன் அதை அறிந்து கொண்டால், தேவன் அதை ஏற்றுக் கொள்ள மாட்டாரோ? துனிப்பட்ட உபவாச நாட்களை நியமிக்கும் போது, அதை பறைசாற்றாமல் அனுச ரிப்பது நல்லது. நாம் சபையாக கூடி உபவாசிக்கும் போது, பலர் அதை அறிந்து கொள்கின்றார்கள். ஆனால், நம்முடைய இருதயமானது தேவ னுக்கு முன்பாக தாழ்மையுள்ளதாக காணப்பட வேண்டும். மற்றவர்க ளுடைய புகழ்ச்சிக்கு நம் செவியை சாய்க்காமல், உபவாசத்தின் கருப் பொருளை உணர்ந்து, நம் சிந்தை கிறிஸ்துவுடைய சிந்தையைப் போல தாழ்மையுள்ளதாக இருக்க வேண்டும். நம் கண்கள் தேவனை நோக்கி பார்க்க வேண்டும். நம் செவிகள் அவருடைய வார்த்தைக்கு திறந்தி ருக்க வேண்டும். நம்முடைய வாய்கள், அவருடைய துதியை சொல்ல வேண்டும். இவைகளிலே தேவன் பிரியமுள்ளவராக இருக்கின்றார்.

ஜெபம்:

என் சிந்தையை முன்னறிந்த தேவனே, சிந்தையும், பேச்சிலும், செய்கையிலும் நான் உமக்கு முன்பாக மனத்தாழ்மையுள்ளவனாக இருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் - 35:13

Category Tags: