தியானம் (ஆவணி 07, 2025)
மனதின் எண்ணங்களை அறிந்தவர்
மத்தேயு 6:18
அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளி பார்.
குறிப்பிட்ட ஊரொன்றிலே, தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றும்படி ஒரு சொந்த ஸ்தாபனத்தை ஆரம்பித்து மனிதனாவன், தன்னுடைய பெயரும், அனுபவமும், பட்டப்படிப்புக்களும் அந்த ஊராருக்கு அறிவிக்கும்படிக்கு, பல விளரம்பரங்களை செய்து வந்தான். சில மாதங்கள் கடந்து சென்ற பின்னர், அவன் ஊரார் மத்தியிலே நன்கு அறிமுகமானான். அவனையும், அவனுடைய ஸ்தானத்தின் அலுவல்க ளைக் குறித்து அநேகர் அறிந்து கொண்டார்கள். எந்த நோக்கத்தி ற்காக அவன், விளம்பரங்களை செய்தானோ அதன் பலனை அடைந்து கொண்டான். அதுபோ லவே, தன்னை விசுவாசி என்று அழைக்கின்ற ஒரு மனிதனா னவன், மனிதர்கள் காண வேண் டும் என்று வாரந்தோறும் உபவாசித்து, தன்தைக் காண்பவர்கள், இவன் ஆவிக்குரியவன் என்று சொல்ல வேண்டும் என்ற எண்ணமுடைய வர்களாக இருந்தால். அவனுடைய நோக்கதின் பலனையே அவன் அடைந்து கொள்வானேயல்லாமல், தேவனிடத்தில் அவனுக்கு பலனி ல்லை. கிறிஸ்தவ வாழ்க்கை என்பது, ஒரு விளம்பரம் அல்ல. வெளிN வஷமான வாழ்க்கையை கண்டு மற்றய மனிதர்கள் நம்மை புகழ்ந்து பேசலாம். ஆனால், இருதங்களை ஆராய்ந்தறிக்கின்றவர் மனிதர்களு டைய மனதின் எண்ணங்களை தூரத்திலிருந்து அறிகின்றார். கிறிஸ்த வாழ்க்கை என்பது கிறிஸ்துவை பின்பற்றும் வாழ்க்கை. அவர் காட்டி வழியிலே செல்லும் வாழ்க்கை. அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு, அவருடைய சிந்தையை தரித்துக் கொள்ள வேண்டும். மனத்தாழ்மை யும், கீழ்படிவும் அவசியமானது. ஒரு விசுவாசியானவன், உபவாசிப்ப தால், தன்னை மற்றவனைவிட மேன்மையானவன் என்று எண்ணுவா னாக இருந்தால், அவன் தேவ ஆலயத்தை விட்டு செல்லும் போது, தேவ னுடைய பார்வையிலே அவன் நீதிமானாக இருக்கமாட்டான். அவன் அடையும் பலன் அவனுடைய மேட்டிமையான கண்களே. எனவே, நாம் உபவாசிக்கும் போது, நோக்கமற்றவர்களாக, மற்றவர்களுக்கு காண்பி க்கும்படி, சோகமடைந்தவர்களைப்போல மற்றவர்கள் முன்பாக நம் மைக் காண்பிக்காமல், உபவாச நாட்களிலே, தேவ சமுகத்திலே இருந்து ஜெபிக்கின்றவர்களாகவும், வேத வசனங்களை தியானித்து, அதன் வெளி ச்சத்திலே நம்மை ஆராய்ந்து அறிந்து தேவனிடத்தில் கிட்டிச் சேர்கி ன்றவர்களாகவும் காணப்படவேண்டும். நம்முடைய மனத்தாழ் மையை காணும் பரலோகத்திலிருக்கின்ற தேவன் வெளியரங்கமாக பலனளிப்பார்.ஷ
ஜெபம்:
பரலேகத்திலிருக்கின்ற பிதாவே, என் இருதயம் உமக்கு முன்பாக ஏற்புடையதாக இருக்கும்படிக்கு, நான் நடக்க வேண்டிய வழியை எனக்கு காண்பித்து, அதிலே நடக்க எனக்கு உதவி செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ஏசாயா 58:1-7