தியானம் (ஆவணி 06, 2025)
உபவாசம் எதற்கு?
2 கொரிந்தியர் 4:16
உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து மலைப் பிரசங்கத்தைக் குறித்து நாம் தியானித்து வருகின்றோம். இந்நாட்களிலே நாளிலே, ஆறாம் அதிகாரத்திலே, உபவாசத்தைக் குறித்து ஆண்வடவர் இயேசு கூறியதைக் குறித்து ஆராய்ந்து தியானிக்கவுள்ளோம். கடந்த நாட்களிலே, பரலோக ராஜ்யத்தைக் குறித்தும், ஜெபத்தைக் குறித்தும் மற்றும், தானதர்மங்கள், பொய் ஆணையிடுதல், விபசாரம், கொலை உட்பட பற்பல போதனைகளைக் குறித்து தியானித்து வந்தோம். ஆண்டவர் இயேசுவின் போதனை யிலே, அவர் நம்மிடத்திலே காண ப்பட வேண்டிய பொதுவான ஒரு குணாதியத்தை குறித்து மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுவதை காணலாம். அதாவது, நம்முடைய நோக்கமானது வெளியான கிரி யைகள் குறித்ததாக மட்டும் இருக்காமல், மிக முக்கிமாக, இருதய மானது தேவனுக்கு முன்பான ஏற்புடையதாக இருக்க வேண்டும். உள்ளான மனிதனிலே உண்டாகும் மாற்றமானது அடிப்படையானதும் அவசியமானதும் என்பதை குறித்து நாம் காண்கின்றோம். எனவே, ஒரு விசுவாசி உபவாசிக்கும் போது, முதலாவதாக நாம் உபவாசத்தின் நோக்கத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். தான் எதற்காக உபவா சிக்கின்றேன். உபவாச நாட்களிலே என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து பரிசுத்த வேதாகமம் கூறும் காரியங்களை அறிந்து கொள்ள வேண்டும். நாம் கிறிஸ்துவை அறிய முன்பதாகவும், நாம் வாழ்ந்து வந்த மார்க்கங்களிலே விரதங்களையும், ஒறுத்தல்களையும் செய்து வந்திருக்கின்றோம். நாம் விட்டுவந்த அந்த முறைமைகளையும், கொள் கைகளையும் நாம் புதிதும் ஜீவனுமான இந்த மார்க்கத்திலே திணிக்கா தபடிக்கு மிகவும் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். சடங்காச்சாரமாக செய்யும் கிரியைகளிலே பலன் இல்லை. 'பக்தியு ள்ளவர்கள் உபவாசிக்கின்றார்கள் எனவே நானும் உபவாசிக்க வேண் டும். நான் என்னை பக்தியுள்ளவனாக காண்பிக்க வேண்டும்' என்ற எண்ணங்கள் தவறானவைகள். தேவ சமுகத்திலே அப்படிப்பட்ட எண்ண ங்கள் ஏற்புடையவைகள் அல்ல. மற்றய மனிதர்களுக்கு முன்பாக நான் பக்தியுள்ளவன் என்று காண்பித்து, அவர்களிடமிருந்து சான்றிதழiயும், அவர்களுடைய அங்கீகாரத்தையும் பெற்றுக் கொள்ளவதால் உண்டா கும் பிரயோஜனம் என்ன? எனவே உபவாசிக்க முன்பதாக உபவா சத்தின் நோக்கத்தை சீராக்கிக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளத்தை தேவனுக்கு ஒப்புக் கொடுங்கள்.
ஜெபம்:
என் இருதயத்தை ஆராய்ந்து அறிகின்ற தேவனே, மனிதர்கள் காணவேண்டும் என்பதற்காக நான் உபவாசிக்காதபடிக்கு, உம்முடைய சமுயத்திலே என்னை தாழ்த்தி உமக்கு பிரியமாக நடக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவேல் 2:13-14