புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 05, 2025)

கர்த்தாவே, நீர் நீதிபரர்!

சங்கீதம் 7:11

தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.


ஒரு ராஜ்யத்தை நீதியாக அரசண்டு வந்த பராக்கிரமமுள்ள ராஜாவா னவன், தன் ராஜ்யதிற்கு புறம்பாக இருக்கும் சிற்றூர்களிலே, பல நெருக்கடிகள் மத்தியிலே வாழ்ந்து வரும் அவ்வூர்களின் குடி மக்களு க்கு இரங்கி, அவர்களுக்கு ஒரு அழைப்பிதலை கொடுத்திருந்தார். அதன்படிக்கு, தன்னையும், தன் ஆளுகையையும் ஏற்றுக் கொள்கி ன்றவர்களுக்கு, தன் ராஜ்யத்திலே குடியுரிமையை பெற்றுக் கொள் ளும் சிலாக்கியத்தை அடையும் வழி ஏற்படுத்தியிருந்தான். அதை கேள்விப்பட்ட, அவ்வூர்களில் வாழ் ந்த குடிமக்கள், பலர் திரண்டு வந்தார்கள். ராஜாவையும், அவர் ஆளுகையையும் ஏற்றுக் கொள் வது என்று அறிக்கை செய்வது கடினமாக காரியமல்ல என்று அவர்கள் அந்த ராஜ்யத்திற்கு இடம் பெயர்ந்தார்கள். அப்படியாக அறிக்கை யிட்டவர்கள் பலர், அந்த ராஜ்யத்தின் சலுகைகளைக் குறித்தே நோக் கமாயிருந்தார்கள். ஆனால், அந்த ராஜாவின் ஆளுகையை ஏற்றுக் கொண்ட அவர்கள், ராஜாவின் ஆளுகை நீதியின் ஆளுகை என்பதை மனதார ஏற்றுக் கொள்ளாததால், தாங்கள் முன்பிருந்த ஊர்களிலே நடப்பித்த அநீதியின் கிரியைகளை நடப்பிக்க தொடங்கினார்கள். இரக் கத்தை காண்பித்த ராஜாவானவர், தன் நீதியைவிட்டு விலகி அநீதிக்கு உடன்படுவாரோ? அவருடைய இரக்கத்தை பெற்றவர்கள், பராக்கிர மத்தை அசட்டை செய்பவர்களை பராமுகமாக விட்டுவிடுவாரரோ? ஆவர் தமது நீதியை நிலைநாட்டி, தமது பராக்கிரமத்தை காண்பிப்பார் அல்லவோ. மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இரத்தினாலே பாவமறக்க ழுவப்பட்டு மீட்பை பெற்றுக் கொண்ட பிரியமான சகோதர சகோ தரிகளே, இலவசமாக கிருபையினாலே மீட்கப்பட்டேன். தேவன் இரக்க முள்ளவர் என்று கூறி, நீங்கள் நினைத்ததெல்லாவற்றையும் நடப்பிக்க முற்;படாதிருங்கள். பிதாவாகிய தேவன்தாமே, தம்முடைய திருக்கும hரனாகிய இயேசு வழியாக ஜீவனுள்ள புதிய மார்க்கத்தை யாவருக்கும் ஏற்படுத்தியிருக்கின்றார். அந்த மார்க்கத்தின் வழியாய் பிரவேசித்தி ருந்தால், அந்த மாரக்கத்திற்குரியவர்களாக வாழ ஒப்புக் கொடுங்கள். பெலவீன நேரங்களிலே, பெலனை பெற்றுக் கொள்ளும்படிக்கு, உங்கள் சுயத்திற்கு இடங்கொடாமல், பரிசுத்த ஆவயினானவர் கிரியை செய்ய இடங் கொடுங்கள். நீங்கள் தேவ ராஜ்யத்தின் பிள்ளைகளாக வாழும் வழியை அவர் அனுதினமும் உங்களுக்கு கற்றுக் கொடுக்க ஆயத்தமுள்ளவராகவே இருக்கின்றார்.

ஜெபம்:

நீதியும் பராக்கிரமமுள்ள பரலோக தேவனே, நான் அழிந்து போகாதடிக்கு நீர் காண்பிக்கும் இரக்கத்தை நான் அசட்டை செய்யாமல், காலத்தை ஆதயப்படுத்திக் கொள்ளும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119:137