தியானம் (ஆடி 30, 2025)
பரலோகத்தின் வழி
யோவான் 14:6
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
மனிதகுலமானது தீமைக்கு அதிகாரியாகிய பிசாசாவனின் வஞ்சகத்தினால் கெட்டழிந்து, நித்திய ஆக்கினைகுள்ளாகாதபடிக்கு, பிதா வாகிய தேவன்தாமே, தம்முடைய ஒரேபேறான திருக்குமாரனாகிய இயேசுவை இந்த உலகிற்கு அனுப்பினார். இரட்சகராகிய இயேசுவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் தீமையினின்று தன் ஆத்துமாவை தீமையினின்று இரட்சித்துக் கொள்வான். இன்று அநேக மனிதர்கள், அன்றாட தேவைகளை மட்டுமல்ல, எதி ர்காலதிற்கு தாங்களும் தங்கள் சந்த திகளும் உயிர்வாழ்வதற்கு தேவை யான பொருட்களை சேமித்து வைக்கி ன்றார்கள். சில விசுவாசிகளும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. அப்படியாக எதிர்காலத்திற்கும் தேவையான வைகளை சேர்த்து வைத்தவர்கள், தேவன் தங்களை ஆசீர்வதித்தார் என்று கூறிக் கொள்கின்றார்கள். அது உண்மையாக இருந்தால், அதற்கு மேலான ஒரு நோக்கம் இருக்கும். அத்தகைய ஆசீர்வாதங்கள், ஒருவனுடைய ஆத்துமாவை தீமையி னின்று இரட்சிக்கக்கூடுமோ? அப்படியாக அந்த ஆசீர்வாதங்கள் அதை உடையவனுனின் ஆத்துமாவை தீமையினின்று இரட்சிக்காமலலும், அவன் தேவனின் தங்கி வாழ்வதைவிட்டு அவன், தன் சுயத்திலும், இந்த உலக ஆஸ்திகளிலும் தங்கி வாழ அவனை நடத்துமென்றால், அதனால் அவனுக்கு இலாபம் என்ன? ஒருவன் உலகமெல்லாம் தன தாக்கி கொண்டாலும் தன் ஆத்துமாவிற்கு கேடு விளைவித்தால் அவனுக்கு பலன் ஒன்றுமில்லை. தேவன் ஒருவரே மனிதகுலத்தை தீமையி னின்று இரட்சிக்க வல்லவர். எந்த மனித முயற்சியினாலும், மத நம்பிக் கையினாலும் அது கூடாத காரியம் என்றபடியால், அவர் தம்முடைய குமாரனாகிய இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். அவர் வழியாக தேவ ராஜ்யத்தை மனிதர்களுக்கு சமீபமாக்கினார். அவர் பிதாவின் அநாதிதீர்மானத்தை வெளிப்படுத்தினார். தேவ மகிமையை அவர் வழியாக மனிதர்களுக்கு வெளிப்படுத்தினார். அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமானவர். மனிதகுலம் இரட்சிப்படைவதற்கு இயேசு நாமம் அல்லாமல் வேறே நாமம் கொடுக்கப்படவில்லை. இயேசு நாமம் இல்லாமல் ஒருவனும் பிதாவவிடத்திற்கு சேர முடியாது. அவரைரில் லாமல் நன்மையாதொன்றையும் நாம் செய்ய முடியாது. எனவே ஜெபிக் கும் போது இரட்சகர் இயேசுவின் நாமத்திலே ஜெபம் செய்கின்றோம்.
ஜெபம்:
பரமண்டலத்திலிருக்கிற எங்கள் பிதாவே, நான் உம்மண்டை சேரும்படிக்கு, உம்முடைய திருக்குமாரனாகிய இயேசு வழியாக நீர் உண்டுபண்ணின புதிய ஜீவனுமான மார்க்கத்திற்காக நன்றி கூறுகின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 11:28