தியானம் (ஆடி 29, 2025)
ஆத்தும மீட்பு
சங்கீதம் 62:5
என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.
மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன்ஆத்துமாவை பாதாள வல்லடிக்கு விலக்குகிறவன் யார்? 'தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாரட்டுகிற, ஒருவனாவது தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிக் கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக் கொள்ளவும், அவனி மித்தம் மீட்கும் பொருளை தேவனு க்குக் கொடுக்கவுங்கூடாதே, அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக் கிறது. அது ஒருபோதும் முடியாது. ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப் போகிறதைக் காண்கிறான். தங்கள் வீடுகள் நித்திய காலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலை முறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம், அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள். ஆகிலும் கனம்பொருந்திய வனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை. அழிந்து போகும் மருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். இதுதான் அவர்கள் வழி, இதுதான் அவர்கள் சந்ததியார். அவர்கள் சொல்லை மெச்சிக் கொள் கின்றார்கள். ஆட்டுமந்தையைப் போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள். மரணம் அவர்களை மேய்ந்து போடும். செம்மையானவர்கள் அதிகாலையிலே அவர்களை ஆண்டு கொள்வார்கள்: அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கச் கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்' என்று இந்த உலகத்திலே மனித பெலத்தின் உச்ச நிலையை அடைந்தவர்களை குறித்து சங்கீதப் புத்தகத்திலே காணாலாம். யார் இந்தத் தீமையிலிருந்து மனிதர்களை விடுவிக்கக்கூடும்? பிதாவாகிய தேவன் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவசிப்பவன் தீமையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கின்றான். தேவ பக்தன் தன் சங்கீதத்தின் வழியாக உரைத்தது போல, ஆனாலும் தேவன் என் ஆத்துமாவை பாதாளத்தின் வல்லமைக்கு தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக் கொள்வார். நாம் ஆராதிக்கும் தேவனே எத்தீங்கும் என்னை அணுகாமல் ஆத்துமாவை காக்க வல்ல தேவன். எனவே, தீமையிலிருந்து இரட்சியும் என்று ஜெபிக்கும் போது, அவர் உண்டுபண்ணின வழியை ஏற்று, அந்த சத்திய வழியிலே நடவுங்கள். அப்பொழுது நித்திய ஜீவனாகிய நன்மையை கண்டடைவீர்கள்.
ஜெபம்:
ஆத்துமாவை கெடுக்கும் தீமையிலிருந்து என்னை விடுவித்து தேவனே, மறுபடியும் நான் இந்த உலகத்தில் பெலம் என்று கருதப்படும் காரியங்களிலே சிக்கிக் கொள்ளாதபடிக்கு என்னை காத்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 89:48