தியானம் (ஆடி 28, 2025)
ஆவியின் சிந்தை
ரோமர் 8:37
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
உமது நிமித்தம் ஏந்நேரமும் கொல்லப்படுகின்றோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்லேயும் நாம் நம்மில் அன் புகூருகிறரவராரே முற்றும் ஜெயங் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரி யங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் என்று அப்போஸ்தலராகிய பவுல் அறிக்கை செய்திருப்பதை, பரிசுத்த வேதாகமத்தில், ரோமருக்கு எழுதிய நிரூபம் எட்டாம் அதிகாரத்திலே வாசிக்கலாம். எந்த மனித பெலத்தினால் இந்த அறிக்கையை செய்ய முடியும்? எந்த ஒரு மனித பெலத்தினாலும் இந்த அறிக்கையை செய்ய முடியாது. இது மனிதர்க ளுடைய பெலத்தினாலும், அவர்கள் பராக்கிரமம் என்று சொல்லி க்கொள்ளும் எந்த அதிகாரத்தினாலே, வல்லமையினாலும் செய்ய முடியாது. ஒருவனிடத்தில் தேவனுடைய ஆவியில்லை என்றால், உலகச் செய்திகளை வாசிப்பது போல, அவன் வெறும் வார்த்தைகளாக இந்த வார்த்தைகளை வாசிக்கலாம். ஆனால், அந்த அறிக்கைக்கும் அவன் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இப்படிப்பட்ட, உபத்திர வங்கள், சோதனைகளை நான் எப்படி மேற்கொள்ளுவேன் என்று ஒரு விசுவாசியானவன் தன் இருதயத்திலே எண்ணிக் கொள்ளலாம். அது மனிதனுடைய சிந்தை. ஆவியானவரோ, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஏற்ற வேளையிலே, நமக்கு தேவையான பெலத்தை தந்து ஒவ்வொரு தடைகளை தாண்டி, சோதனைகளை ஜெயங்கொள்ளும்படிக்கு, வழிநட த்துகின்றவராயிருக்கின்றார். மனித பெலன், மாம்ச சிந்தைக்குட்பட்டது. அது பயத்தை உண்டுபண்ணும். ஆனால், தேவ பெலமோ, ஆவியின் சிந்தை. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படு த்துகிறவர்களாயிருக்கிறோம்.
ஜெபம்:
இந்த உலகத்தை ஜெயிக்கும்படி ஏற்ற வேளையிலே பெலன் தந்து வழிநடத்தும் தேவனே, இந்த உலகத்தினாலே உண்டாகும் உபத்திரவங்களை கண்டு அஞ்சாமல் முன்செல்ல பெலப்படுத்தி நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-3