தியானம் (ஆடி 27, 2025)
சத்திய வார்த்தையிலே நிலைத்திருங்கள்
எபேசியர் 6:10
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.
உலகிலே போராட்டம். வாழ்விலே போராட்டம். மனதினிலே போராட்டம் என்று சில விசுவாசிகள் சொந்து கொள்கின்றார்கள். போராட்டம் உண் டாவதற்கு ஒரு எதிரி அல்லது எதிர்கும் சக்தி இருக்க வேண்டும். மனித குலத்தை நித்திய ஆக்கினைக்குள்ளாக்க வேண்டும் என்ற நோக்க த்தோடு செயற்படுபம் பிசாசான வனே, ஆதியிலிருந்து நம்மு டைய பரம எதிரியாக இருக்கி ன்றான். ஒரு விசுவாசிக்கு போ ராட்டம் வேண்டாம் என்றால் அவன் எதிரியோடு சமரசம் செய்ய வேண்டும். அப்படி சமரசம் செய்து கொள்பவன், தன்னைத்தான் இருளின் அதிகாரத்திற்கு ஒப்புக் கொடுக்கின்றவனாக இருப்பான். அதன் முடிவு அழிவு. நித்திய நரகமாயிருக்கும். எனவே, போராட்டத்தை கண்டு சோர்ந்து போகாமல், கர்த்தரிலும் அவருடைய சத்துவததின் வல்லமையிலும் பெலப்பட வேண்டும். பாடுகள், உபத்திவரங்கள், துன்பங்கள் மட்டுமல்ல, இச்சையான கேட்டிற்குள், பொருளாசைக்குள், விசுவாசிகளை விழுத்தும்படிக்கு, பற்பல சோதனை களோடு, சோதனைக்காரனாகிய பிசாசானவன் வருவான். 'நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல? துரைத்தனங்களோடும், அதிகார ங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்கு போராட்டம் உண்டு. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியு ள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.' சத்திய வார்த்தையிலே நிலைத்திருங்கள். அதன் படிக்கு சத்திய வேதத்தை அனுதினமும் வாசித்து தியானியுங்கள். விசுவாச அறிக்கையிலே உறுதியாயிருங்கள். இரச்சிப்பின் நற்செய் தியை அறிவுங்கள், நீதியிலே நிலைத்திருங்கள். யாவருக்காகவும் ஊக் கமாக ஜெபம் செய்யுங்கள். இவைகளிலே நிலைத்திருக்கும் போது, எதிரியானவன் உங்களை மேற்கொள்ள முடியாது. நீங்கள் பெலத் தின்மேல் பெலனடைவீர்கள். உள்ளான மனுஷன் நாளுக்குநாள் புதிதா க்கப்படும். நீங்கள் பூமிக்கு உப்பாக இருப்பீர்கள். உலகத்திற்கு வெளிச்சமாயிருப்பீர்கள். உங்கள் வழியாக பரலோக பிதாவின் நாமம் மகிமைப்படும்.
ஜெபம்:
சத்துவம் இல்லாதவனுக்கு சத்துவத்தை கொடுக்கும் தேவனே, பிசாசானவனின் தந்திரங்களை கண்டு நான் சோர்ந்து போகதபடிக்கு, உம்முடைய வார்த்தையினோலே நான் ஜெயம் கொள்ள என்னை பெலப்படுத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 பேதுரு 5:8