தியானம் (ஆடி 26, 2025)
மன உறுதியோடு சேவியுங்கள்
பிலிப்பியர் 2:16
எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.
தானியேலும் அவனுடைய நண்பர்களும் அவர்களுடைய சிறைக் கைதி களாக பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். குற்றமறியாத அவர் கள்,தங்கள் இளவயதிலேயே, பெற்றோர், உறவினர், நண்பர்களிடமி ருந்து பிரிக்கபட்டு, அவர்கள் பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து, தேவனை அறியாத அந்நிய தேசத்திற்கு சிறைப்பட்டுப் போனார்கள். தேவனை நோக்கி முறுமுறுப்பதற்கு அவர்களு க்கு அநேக சாட்டுப்போக்குகள் இரு ந்தது. அதுமட்டுமல்லதமல், அவர்கள் ராஜாவின் சேவைக்காக பயிற்சிவிக்க நியமிக்கப்பட்ட நாள் முதல், அவர்களு டைய விசுவாசம் சோதனைக்குட்படு த்தப்பட்டது. ராஜாவின் போஜனத்தி னால் கூட, தங்களை தீட்டுப்படுத்த மனதில்லாமல், தேவனைக்குறித்த வைராக்கியத்திலே நிலைத்திரு ந்தார்கள். மகா பராக்கிரமமுள்ள சக்கரவத்தியாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்திய சிலையை வணங்கள் மறுத்ததால், தானியேலின் நண்பர்கள் ஏழுமடங்கு சூடாக்கப்பட்ட அக்கினி சூளைக்குள் போடப்பட்டார்கள். தேவனை நோக்கி ஜெபம் செய்ததால், தானியேல் சிங்களின் குகை யிலே போடப்பட்டான். ஆனாலும், எப்படிப்பட்ட பாடுகள் உபத்திரவ ங்கள், சோதனைகள் வந்தாலும், ஒருவேளை மரிக்க நேர்ந்தாலும், அவர்கள் தாங்கள் ஆராதிக்கும் தேவனாகிய கர்த்தரைப் பற்றி, தங்;கள் மனதில் கொண்ட வைராக்கதியத்தைவிட்டு சற்றேனும் தளர்ந்து போக திருந்தார்கள். தேவ தூதர்களை அனுப்பி, தேவன்தாமே அவர்களை காப்பாற்றி, தம்முயை சாட்சிகளாக நிறுத்தினார். அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத ப்பட்டு: நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமகிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானா கிய லோத்தை அவர் இரட்சித்திருக்க, கர்த்தர் தேவபக்தியுள்ளவர்க ளைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினை க்குள்ளானவர்களாக நியாத்தீரப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக் கின்றார். எனவே, கோணாலும் மாறுபாடானதுமான சந்ததியில், கிறிஸ் துவினிமித்தம் பாடுகள், உபத்திரவங்க்ள, சோதனைகள் உண்டாகும் போது, முறுமுப்பில்லாதவர்களும், தர்கிப்பில்லாதவர்களுமாயிருந்து, தேவ ஆவியின் துணையை நாடுங்கள். அவர்தாமே, பெலன் இல்லாத வேளைகளிலே நமக்கு சத்துவத்தை தந்து, தேவ வார்த்தையில் நிலை வத்திருக்க கிருபை செய்வார்.
ஜெபம்:
உம்முடையவர்களை சோதனையினின்று விடுவிக்க வல்ல தேவனே, உபத்திவங்கிளின் மத்தியிலே நான் சோர்ந்து போகதாபடிக்கு, உம் வார்த்தையிலே நிலைத்தீருக்கும்படி என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - தானியேல் 3:17