தியானம் (ஆடி 25, 2025)
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்
1 பேதுரு 4:13
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.
பிரியமானவர்களே, உங்களை சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக் குறித்து ஏதோ புதுமையென்று திகை யாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்தி க்கப்பட்டால் பாக்கியவான்கள்: ஏனென்றால் தேவனுடைய ஆவி யாகிய மகிமையுள்ள ஆவியான வர் உங்கள்மேல் தங்கியிருக்கி றார்: அவர்களாலே தூஷpக்கப்படு கிறார்: உங்களாலே மகிமைப்படு வார். ஆனால் விசுவாசியானவ னொருவன், கொலைபாதகனா வது, திருடனாயாவது, பொல்ல hங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டு கொண் டவனாயாவது பாடுபடுகிறவனாயிருந்து கொண்டு, தான் சோதிக்க ப்படுகின்றேன் என்று கூற முடியாது. இது பின்மாற்ற மான வாழ்க்கை. அப்படிப்பட்டவன் தன் ஆதி நிலைக்கு திரும்ப வேண் டும். ஒருவன் பாவம் செய்தால் அதிலிருந்து அவன் விடுதலை யாகும்படிக்கு வழியை அறிந்திருக்கின்றான். அவன் சிலுவையண் டைக்கு வந்து, மனம்திரும்பி, தன் பாவங்களை அறிக்கையிடும் போது, பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவரா யிருக்கிறார். (1 யோவான் 1:9). கோணலும் மாறுபாடுமான உலகத்திலே, பாடுகள், உபத்திரவங்கள் இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கை இல்லை. அன்றியும் கிறிஸ்து இயேவு க்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்ப டுவார்கள் என்று தேவ ஊழியராகிய பவுல், தீமோத்தேயுக்கு கூறியிருக் கின்றார். இவைகளோடு, ஆசை இச்சைகளால் இழுப்புண்டு, சோதனை க்குட்படுவதை சேர்த்துக் கொள்ளக்கூடாது. பாடுகள் உபத்தரவங்ளி லிருந்து நம்மை விடுவிக்க வல்ல தேவனானவர், நம்மை இச்சைகளிலே இழுப்புண்டு சோதிக்கப்படாதபடிக்கு காக்க வல்லவராயிருக்கின்றார். ஆனால், ஒருவன் தேவனுடைய சத்தத்தை கேட்க மனதில்லாமல், தன் செவியை அடைத்துக் கொண்டு, பரமண்டலங்களிலே இருக்கின்ற பிதாவே, நீர் என்னை சோதனைக்குட்படப்பண்ணாதிரும் என்று ஜெபி ப்பதினால் பலன் இல்லை. எனவே, தேவ சத்தத்திற்கு நாம் யாவரும் கீழ்படிந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
ஜெபம்:
சோதனையினின்று என்னை விடுவிக்க வல்ல தேவனே, தப்பித் துக் கொள்ளுகின்ற பாக்கை நீர் உண்டுபண்ணும் போது, நான் அதை அசட்டை பண்ணாதபடிக்கு உம் வார்த்தையின்படி வாழ கிருபை செய்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - நீதி 28:13