தியானம் (ஆடி 24, 2025)
வெற்றி சிறக்க பண்ணுகின்றவர்
யாக்கோபு 1:3
உங்கள் விசுவாசத்தின் பரீ ட்சையானது பொறுமை யை உண்டாக்குமென்று அறிந்துஇ அதை மிகுந்த சந் தோஷமாக எண்ணுங்கள்.
பாடசாலைக்கு செல்லும் தங்கள் பிள்ளைகள் யாவரும் படித்து பட்டம் பெற வேண்டும் அல்லது விளையாட்டு துறையிலே சிறந்து விளங்க வேண்டும் என்பது பெற்றோரின் சோக்கமாக இருக்கின்றது. எனவே, பெற்றோர் தங்களால் முடிந்த வரை தங்கள் பிள்ளைகளை ஊரிலுள்ள சிறந்த பாடாசாலைகளிலே சேர்த்து விடுகின்றார்கள். மாலை நேரங்க ளிலே மேலதிக வகுப்புகளுக்கு அனு ப்பி வைக்கின்றார்கள். பிள்ளைகள்; எவ்வளவு கற்று தேர்ந்திருக்கின்றா ர்கள் என்று எதினால் அறிய ப்படுகி ன்றது? பாடாலையிலே நட த்தப்படும் பரீட்சைகளினால் அல்லவா? தங்கள் பிள்ளைகளின் எதிர்கால நன்மையை விரும்பும் எந்தப்பெற்றோரும் பரீட் சைகளுக்கு எதிர்த்து நிற்பதில்லை. இதனால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சோதனை க்குட்படுத்துகி ன்றார்கள் என்பது பொருளல்ல. தங்கள் பிள்ளைகள் அழிந்து போவத ற்காக அல்ல, அவர்கள் எதிர்காலம் சிறந்து விளங்க வேண்டும் என்ப தற்காக ஊன்றக் கட்டும்படி தங்கள் பிள்ளைகளை பரீட்சைக்கு நிற்க ஆயத்தப்படுத்தி, அதற்காக அவர்களுக்கு வேண்டிய ஆதரவுகளை கொடுக்கின்றார்கள். இந்த உலகத்தின் பெற்றோரின் காரியம் அப்படியா னால், அழியாத ராஜ்யத்திற்கென்று நம்மை தகுதி யாக்கும்படி, தம் முடைய ஒரே பேறான திருக்குமாரனாகிய இயேசுவை நமக்காக கொடு த்த பரம தந்தை மேன்மையானவைகளையே நாம் நாடும்படி நடுத்து வார் அல்லவா? அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்க ப்படும், அதைப்பார்க்கிலும் விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்க ளுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். பிரிய மானவர்களே, உங்களை சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றி யெரிகிற அக்கினியைக் குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழு ம்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். எல்லா சோதனைகளிலும் உங்களோடிருந்து உங் களை ஜெயங்கொள்ளும்படி நடத்தும் தேவ ஆவியானவர்தாமே உங்க ளோடு இருக்கின்றார். உயர்விலும் தாழ்விலும், சோதனை துன்ப வேளைகளிலும் அவர்; உங்களை கிறிஸ்துவுக்குள் முற்றிலும் ஜெயங் கொள்ளும்படி நடத்துவார்.
ஜெபம்:
கிறிஸ்துவுக்குள் என்னை வெற்றிசிறக்கப்பண்ணும் தேவனே, உயர்விலும், தாழ்விலும், சோதனையிலும், வேதனையிலும், உம்மேல் கொண்ட விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்க என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 கொரி 10:13