தியானம் (ஆடி 23, 2025)
உண்மையுள்ளவர் கைவிடமாட்டார்
யோவான் 10:10
நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
திருடன் கொல்லவும் அழிக்கவுமேயன்றி வேறொன்றுக்கும் வரான். அதாவது, பிசாசானவனின் ஆலோசனைகள், அழைப்புக்கள் எவ்வளவு கவர்ச்சியுள்ளதாகவும், உலக வாழ்க்கைக்கு நன்மையானதாகவும் தோன்றலாம். அவை யாவும் அழிவுக்குரிய அழைப்பாக காணப்படுகின்றது. மனிதர்கள் அழிந்து போகவேண்டும் என்றே தந்திரமான கண்ணிகளை அவன் ஏற்படுத்தி, அவைகள் வழி யாக மனிதர்களுடைய ஆத்துமாவை கெடுத்துப்போடுவதே அவனு டைய முதன்மையான நோக்கமாயிருக்கின்றது. அவனுடைய சோத னைகள் யாவும் தீமையானவை களும் அழிவுக்குரியதுமாகவே இருக்கின்றது. ஆனால் நம்முடைய மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவோ, மனிதர்களுக்கு ஜீவனைக் கொடுக்கவும், அது பரிபூரணப்படும்படியாகவும் இந்த பூவுலகிற்கு வந்தார். ஆதலால், அவர் நாம் சோதனையிலே விழுந்து போகாதபடிக்கும், தீமையானது நம்மை மேற்கொள்ளாதபடி க்கும் நமக்காக வேண்டுதல் செய்கின்றவராக இருக்கின்றார். கர்த்தர் தாம் காட்டிக் கொடுக்கப்பபட்ட அந்த இராத்திரியிலே, தம்முடைய பிரதான சீஷனாகிய சீமோன் பேதுருவை நோக்கி: சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங் களைப் புடைக்கிறதிற்கு உத்தரவு கேட்டுக கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்: நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். பாடுகள், உபத்திவரங்கள் மத்தியிலே நாம் சோதனைக்குட்படாதபடிக்கு, நம்மு டைய மீட்பராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பரிந்து பேசுகின்றவராக இருக்கின்றார். மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவரா யிருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையை தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்கு தப்பித்துக் கொள்ளும் போக்கையும் உண்டாக்குவார். எனவே உங்களை திக்கற்றோராக கைவிட மாட்டேன். உலகத்தின் முடிவு பரிய ந்தம் சகல நாட்களிலும் உங்களுடனேகூட இருப்பேன் என்று கூறிய நம் கர்த்தர் தம்முடைய வாக்கிலே உண்மையுள்ளவராகவே இருக்கி ன்றார். தேவனுடைய வலதுபாரிசத்தில்; இருக்கிற நம்முடைய மீட்பராகிய இயேசு கிறிஸ்துதாமே நமக்காக வேண்டுதல் செய்கிறவர் அவரே. அவரைப் பற்றிக் கொள்ளும்படி அவருடைய வார்த்தையிலே நிலைத்திருங்கள்.
ஜெபம்:
திராணிக்கு மேலாக சோதிக்கப்பட அனுமதியாத தேவனே, நான் விசுவாசத்தைவிட்டு வழுகி, உலக போக்கிலே சிக்குண்டு அழிந்து போகாதபடிக்கு, உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நடக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ரோமர் 8:34