புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 22, 2025)

தேவ வார்த்தை நிறைவேற இடங்கொடுங்கள்

1 கொரிந்தியர் 2:15

ஆவிக்குரியவன் எல்லா வற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்;


உலகமும் அதன் போக்கும் வெளிப்பார்வைக்கு எப்போதும் கவர்ச்சியானதாக காணப்படும். அவை விசுவாசிகளை நயங்;காட்டி அழைக்கும். ஆனால் விசுவாசியின் உள்ளத்தில் வாசம் செய்யும் ஆவியானவர் அவன் நடக்கவேண்டிய வழியையும், செல்லக்கூடாத இடத்தையும் அவனுக்கு உணர்த்துகின்றார். சுத்தமனசாட்சியானது அவனுக்கு கொடு க்கப்பட்டிருக்கின்றது. ஆனால், சில வேளைகளிலே, நிலை தவறிப்போ ய்விடுகின்றான். சிலர், தேவ ஆலோச னைகளையும், எச்சரிப்பையும் தள்ளி விட்டு, முதல்தடவையாக தங்கள் எண் ணப்படி தங்களை சோதனைக்கு ட்படுத்தி, அதன் பாதகமான பின்வி ளைவுகளை கண்டடைகின்றார்கள். தேவனுக்கு பிரியமாக நடக்க விரும்புகின்றவர்கள், அந்த சுயதீர்மானத் தினால் வந்த சோதனையை, தங்கள் வாழ்வின் நல்ல பாடமாக எடு த்துக் கொண்டு, அந்த பொல்லாத வழியை முற்றாக, முழுமனதோடு தங்கள் வாழ்விலே அடைத்து விடுகின்றார்கள். இவர்கள் தேவ கிரு பையை விருதாவாக்குதில்லை. தங்கள் குற்றங்களை அறிக்கை செய்து விட்டுவிடுகின்றார்கள். ஆனால் வேறு சிலரோ, இச்சையினால் இழுப்பு ண்டு போய், தேவனுக்கு பிரியமான காரியங்களோடு, தொடர்புகளை துண்டிக்காமல், அவைகளுக்கும் தங்கள் உள்ளத்திற்கும் பாலம் அமை த்துக் கொள்கின்றார்கள். இவர்கள் தாங்கள் குணப்படும்படி நெருக்கி ஏவும் தேவ கிருபையை போக்கடிக்கின்றார்கள். தங்கள் குற்றங்களை அறிக்கை செய்தாலும், அதை முழுமையாக விட்டுவிடுவதில்லை. எவ்வ ளவு கற்றாலும், அவற்றை தங்கள் வாழ்விலே பயிற்சிவிப்பதில்லை. ஒருவன் ஆவிக்கேற்றபடி நடந்து கொண்டால், அப்பொழுது மாம்ச இச் சையயை நிறைவேற்றாதிருப்பான்;. மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிகிறது, நீங்கள் செய்ய வேண் டுமென்றிருக்கிறவைகளை செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொ ன்று விரோதமாயிருக்கிறது. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்ச த்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையிலே அறைந்தி ருக்கின்றார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். இவைகளை குறித்து இன்னும் அதிகமாக கலாத்தியருக்கு எழுதின நிரூபத்தில் 5ம் அதிகாரத்தில் காணலாம். எனவே, தேவனுடைய வார்த்தையிலே நிலைத்திருக்கின்றவர்கள், தங்கள் வாழ்க்கையிலே மிகுந்த கனிகளை கொடுக்கின்றார்கள்.

ஜெபம்:

கிருபையினாலே பெலப்படுத்தும் என் பரலோக தந்தையே, இந்த உலகத்தினால் உண்டாகும் அழைப்பினை நான் நிதானித்து அறிந்து, அவைகளை நான் பின்பற்றி செல்லாதபடிக்கு, எனக்கு பெலன் தந்த வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 5:16