புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 21, 2025)

துன்பங்களில் வெற்றி நிச்சயம்

2 தீமோத்தேயு 3:12

அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.


விழுந்து போன இந்த உலகிலே, எந்த மனிதனும் சோதனைகளையும், பாடுகளையும் தவிர்த்துக் கொள்ள முடியாது. தேவ சித்தமானது மனிதர் கள் வாழ்விலே நிறைவேறாதடிக்கு, இருளின் அதிகாரிகாரியாகிய, அந் தகாரலோகாதிபதியாகிய, பிசாசானவனும், அவனுடைய தூதர்களும் செய்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எடுத்துக்காட்டாக, தேவனாகிய கர்த்தர்தாமே, இளைஞனாகிய தாவீதை சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாக்கும்படி சித்தம் கொண் டார். ஆனால், அந்நாட்களிலே ராஜ் யத்தை ஆண்டு வந்த சவுல், அவன்மேல் எரிச்சல் கொண்டு, அவனை கொன்றுபோடும்படி, தன்னுடைய இராணுவ பலத்தோடு அவனுக்கு பின் சென்றான். ஆனால், தாவீது சென்ற இடமெல்லாம். தேவன் அவ னோடிருந்து, அவனை தப்புவித்து, அவனுக்கு ஜெயத்தைக் கொடுத்தார். இது தாவீது யுத்தம் செய்வதற்குரிய பயிற்சிக் காலம் என்று சிலர் சொல்லிக் கொள்கின்றார்கள். ஆனால், அவன் இளைஞனாக இருக்கும் போதே, படைகள் அஞ்சிப் பின்வாங்க காரணமாக இருந்த கோலியாத்தை எப்படி ஜெயிப்பதென்று நன்றாக அறிந்திருந்தான். தாவீது எந்த யுத்தத்தையும் தன் பெலத்தின்படியோ, தன் புத்தியின்படியோ நடத்தாமல், தேவ வழிநடத்துதலுக்காக காத்திருந்தான். தாவீதை அன்று வேறு பிரித்தது போல, இன்று எங்களையும் தேவன் வேறு பிரித்திருக்கின்றார். நாம் தேவ சித்தத்தை செய்ய ஒரு அடி எடுத்து வைக்கும் போதே, எதிராளியாகிய பிசாசானவன் பலவிதமான தந்திரங்களோடு, செயற் படுவான். தன் தூதர்கள் வழியாகவும், தன் வழியை இலகுவாக பின்பற்றுகின்ற மனிதர்கள் வழியாகவும், தேவனால் வேறுபிரிக்க ப்பட்ட வர்களின் நாளாந்த வாழ்க்கையிலே துன்பங்களை ஏற்படுத்த முயற ;சிப்பான். தேசத்தின் சட்டங்கள் வழியாகவும், வாழும் சமுகத்தினால் உண்டாகும் அழுத்தங்களினாலும், அயலிலே, பிள்ளைகள் படிக்கும் பாடசாலைகளிலே, வேலை செய்யும் இடங்களிலே, கடைத் தெருக் களிலே, நண்பர்கள் உறவுகள் வழியாக, ஏன் சில இடங்களிலே சொந் தக் குடும்பத்தினாலும், உபத்திரவங்களை உண்டாகலாம். ஆனால், கர்த் தரின் வார்த்தையிலே நிலைத்திருந்து, அவருடைய ஆலோசனை யின் படி வாழ்கின்ற விசுவாசி, எல்லா சூழ்நிலைகளிலும் தேவ சித்த த்தை நிறைவேற்றி, தேவனுடைய பார்வையிலே ஜெயம் பெற்றவனாக திகழு வான். எனவே, தேவ சித்தம் உங்களிலே நிறைவேற இடங் கொடுங்கள்.

ஜெபம்:

வெற்றியின் பாதையிலே நடத்தும் தேவனே, இந்த உலகத்தினால் உண்டாகும் அழுத்தங்களை கண்டு, நான் சோர்ந்து பின்வாங்கிப் போய்விடாதபடிக்கு, என்னை பெலப்படுத்தி உம் வழியில் நடக்க உதவி செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மோமர் 8:37