புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 20, 2025)

நல்ல தந்தையைப்போல வழிநடத்தும் தேவன்

சங்கீதம் 119:37

மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.


ஒரு தவழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு முன்பாக எரிந்து கொண்டிருக்கும் விளக்கை வைத்துவிட்டு, அந்த குழந்தை நெருப்பை தொடுமோ இல்லையோ என்று சோதிக்கும் பெற்றோர் உண் டோ? இல்லை. ஆனால், அந்த குழந்தை வளர்ந்து பாலர் பாடசாலை க்கு செல்லும் பருவம் வரும் போது, பெற்றோர் அந்த பிள்ளைக்கு, விள க்குகளையும், நெருப்பையும் குறித்து கற்றுக் கொடுக்கின்றார்கள். அதன் உபயோகத்தையும், அதனால் உண் டாகக்கூடிய ஆபத்துக்களையும் குறி த்து விளக்கிக் கூறுகின்றார்கள். கற் கும் பாடசாலைகளிலே அதை குறி த்து இன்னும் விளக்கமாக கற்றுக் கொடுகின்றார்கள். ஆனால், அந்த பிள்ளையானது, கற்றுக் கொண்டதை தன் வாழ்விலே கடைப்பிடிக் குமோ இல்லையோ என்பது பரீட்சைக்குட்படுத்தப்படும். அதாவது, ஒரு நாள் எரிந்து கொண்டிருக்கும் விளக்கை காணும் போது, அந்த பிள் ளையானது அதை தொட்டு விளையாடுவானோ அல்லது அதைத் தொட் டால், பெற்றோர் சொல்வது போல் உண்மையான காயங்களும் நோவு களும் ஏற்படுமோ என்று தன் மனதிலே எண்ணிக் கொண்டு, நான் அதை தொட்டுப்பார்ப்பேன் என்று அதை தொட்டுவானோ என்பது அவன் வாழ்வின் நடைமுடையிலே வெளிப்படும். இப்படிப்பட்ட சுபாவ மானது, ஆதியிலே ஏதேனிலிருந்த நம்முடைய ஆதிப் பெற்றோராகிய ஆதாம், ஏவாள் தொடங்கி, இன்றைய நாள்வரைக்கும் மனிதர்களின் மனதிலே உண்டு. ஒரு விசுவாசியானவன், ஆவிக்குரிய குழந்தையாக பிறந்து அரவணைப் போடு பாதுகாக்கப்பட்டு, சிறு பிள்ளைகளாக வள ர்ந்து வரும்போது, அவன் தேவனுடைய ஆலோசனைகளையும் அத னால் உண்டாகும் நன்மைiயும், தேவனுடைய நல்லோசனைகளை அற் பமாக எண்ணி அவைகளை தவிர்த்துக் கொண்டால், அதனால் உண் டாகும் தீமையையும் கற்றுக் கொள்கின்றான். பிள்ளைகள் வளர்ந்து சுயாதீனமடையும்போது, கற்றவைகளை தங்கள் வாழ்வில் கைக்கொள் வார்களோ அல்லது, மற்றவர்களுடைய அனுபவம் எனக்கு போதாது, எனவே நான் தேவன் விலக்கிய காரியங்களை, தொட்டுப்பார்ப்பேன், ருசித்துப் பார்ப்பேன் என்று தன்னைத்தான் சோதனைக்கு உட்படுத்தி கொள்வானோ என்பது அவனுடைய வாழ்க்கையின் நடைமுறையி னாலே வெளிப்படும். இந்த நிலைமைக்குள்ளாகாபடிக்கு, நம்மை அனு தினமும் காத்துக் கொள்ளும் என்பது நம்முடைய ஜெபமாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

நான் நடக்க வேண்டிய வழியை எனக்கு போதிக்கும் தேவனே, உம்முடைய ஆலோசனைகைளை மறந்து, இந்த உலகிலே கண்ணிகளில் சிக்கிகொள்ளாதபடிக்கு, எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:2-3