புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 19, 2025)

சோதனைகளிலே உதவி செய்கின்றார்

யாக்கோபு 1:13

தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.


கர்த்தர் கற்பித்த மாதிரி ஜெபத்திலே ஏழு அம்சங்கள் உண்டு என்றும், அவைகளிலே மூன்று வேண்டுதல் உள்ளடங்கியுள்ளதென்பதையும் இந்த மாத ஆரம்பத்திலே தியானம் செய்தோம். கடந்த நாட்களிலே, எங் களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கும் தாரும், எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிகிறதுபோல எங்கள் கடன்களை எங் களுக்க மன்னியும் என்ற வேண்டு தல்களை குறித்து தியானித்து வந் தோம். இன்று எங்களைச் சோத னைக்குட்படப் பண்ணாமல், தீமை யினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும் என்ற வேண்டுதலின் கருப்பொருளை குறித்த தியான த்தை ஆரம்பிப்போம். முதலாவ தாக, நம்முடைய பிதாவாகிய தேவன் சோதனைக்காரன் அல்ல. அவர் ஒருவரையும் பொல்லாங்கி னாலே சோதிக்கின்றவர் அல்ல. பிசாசானவனே சோதனைக்காரன். அவன் ஆதியிலிருந்து, தேவ பிள்ளைகளை வஞ்சிக்கும்படிக்கு, தந்திரமான சோதனைகளை, தேவ வசனத்தோடு கலந்து சோதிக்கின்றவனாக இருக்கின்றான். நம்முடைய ஆண்டவராகிய இயேசு இந்த உலகிலே தம்முடைய திருப்பணியை வெளியரங்கமாக ஆரம்பித்த நாளிலே, தேவ சித்தத்திற்கு எதிராக அவரை வழிநடத்தும்படிக்கு, அவரை சோதித்தான். ஆனால், ஆண்டவர் இயேசுவோ, தேவ வார்த்தையினாலே அவனை தோற்கடித்து, துரத்தி விட்டார். இந்த உலகிலே வாழும் மனிதநேயம் கொண்ட தகப்பன்மார், தங்கள் பிள்ளைகள் கெட்டுப் போக வேண்டும் என்று, இச்சையான காரியங்களுக்குள் அவர்களை நடத்திச் செல்ல மாட்டார்கள். அப்படி யானால், ஒருவரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையு ம்படிக்கு தம்முமைய ஒரே பேறான குமாரனை கொடுத்தவர், தம்மு டைய பிள்ளைகள் பாவம் செய்ய வேண்டும், தோற்றுப் போக வேண்டும், தன்னைவிட்டு தூரம் போக வேண்டும் என்று அவர்களுக்கு தந்திரமான சோதனைகளை அனுமதிப்பாரோ. அவர் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டார். மாறாக, பாடுகள் சோதனைகள் மத்தியிலே தம்முடைய பிள்ளைகள் தம்மை கிட்டிச் சேர வேண்டும் என்று அவர் போக்கை உண்டு பண்ணுகின்றவராக இருக்கின்றார். எல்லாவற்றையும் நாம் நிதானித்து அறியும்படிக்கு நம்மோடு என்றென்றும் இருக்கும்படி சத்திய ஆவியாவரை நமக்கு கொடுத்திருக்கின்றார். அவருக்கு நாம் இடங்கொடுக்கும் போது, அவர் எல்லா சூழ்நிலைகளிலும், நாம் நடக்க வேண்டிய வழியை நமக்கு போதித்து நடத்துவார்.

ஜெபம்:

என்மேல் கண்வைத்து ஆலோசனை தரும் கர்த்தாவே, சோதனைக்காரனின் தந்திரமான வஞ்சகத்திற்குள் நான் இழுப்புண்டு போகாதபடிக்கு, மனப் பிரகாசமுள்ள கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 34:15