தியானம் (ஆடி 18, 2025)
சுய எண்ணங்களை விட்டுவிடுங்கள்
எபிரெயர் 10:36
நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத் தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.
'இதுதான் இந்தக் காரியத்தை குறித்த என்னுடைய கொள்கை' அல்லது மூதாதையோர் கூறிய பழமொழிகளை கூறி, இப்படித்தான் நான் நடந்து கொள்கின்றேன் என்று கூறும் சில விசுவாசிகளை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். சில வேளைகளிலே விசுவாசிகள் யாவரும், தங்கள் கொள்கை, கோட்பாடுகளை கூறிக் கொள்வதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. யாராகிலும், எத்தனை நன்மையானதும், பெருந்தொகையான மனிதர்களால் ஏற்றுக் கொள்ளப்படும், கொள்கை கோட்பாடுகளை கூறிக் கொள்ளலாம். ஆனால், அவை தேவனுடைய வார்த்தைக்கு உட்பட்டிருந்தால், அது நன்மையும், அவை தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக செல்ல வழிநடத்துமெ ன்றால் அது தீமையுமாக இருக் கும். சில சமயங்களிலே, விசுவா சிகள், தங்களுக்கு ஆதரவாக இன் னும் அநேகர் இருப்பதினால், தாங் கள் செல்லும் வழி சரியானது என்று தங்கள் மனதிலே எண்ணிக் கொள் கின்றார்கள். ஒருவேளை அந்த வழி, தேவனுடைய வழியாக இருந்தால் நல்லது. இல்லாவிடில் அந்த ஞானத்திற்கு இந்த உலகிலே பிரபல்யமான ஒரு பெயர் உண்டு. ஜனநாயகம். அதிகபடியானோர், நான் மற்ற சகோதரனோடு நடந்து கொண்ட விதத்தை ஏற்றுக் ஆதரித்து ஏற்றுக் கொள்கின்றார்கள், ஆதாலால் நான் போகும் பாதை சரியானது என்பது ஜனநாயகம் என்று அழைக்கப்படுகின்றது. அது இந்த உலக த்திற்கும், உலகத்தின் போக்கின்படி வாழ்கின்றவர்களுக்கும் ஞான முள்ள வழியாக காணப்படுகின்றது. ஆனால், தேவனுடைய பார்வை யிலே அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால், அது தேவனுடைய வழியல்லவே. எனவே, மன்னிப்பையும், இரக்கத்தையும் பற்றி தியா னித்துக் கொண்டிருக்கும் இந்த நாளிலே, எதையும் உங்கள் எண்ண ப்படி ஊகித்து, தீர்மானித்துக் கொள்ளாமலும், அதிகபடியானோரின் வழியிலே நிற்பதால், நான் சரியான பாதையிலே போகின்றேன் என்று எண்ணிக் கொள்ளாமலும், தேவ வார்த்தையின் வெளிச்சத்திலே உங் கள் இருதயங்களை ஆராய்ந்து பாருங்கள். சுத்த மனசாட்சியானது, சூடுண்டு போகமுன்பதாக, தேவ ஆவியானவரின் மெல்லிய சத்தத் திற்கு இடங் கொடுங்கள். இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவன் மனிதர்களின் சிந்தையை அறிந்திருக்கின்றார்.
ஜெபம்:
இருதயங்களை ஆராய்ந்து, என்னுடைய சிந்தையை அறிந்த தேவனே, பலர் செல்கின்றார்கள் என்று அழிவுக்குரிய பாதையிலே நானும் சென்றுவிடாதபடிக்கு, எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிந டத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எசே 33:11