தியானம் (ஆடி 17, 2025)
தேவனுடைய நீடிய பொறுமை
2 பேதுரு 3:9
ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும் பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையு ள்ளவராயிருக்கிறார்.
ஒரு விசுவாசியானவன் தன் மேய்ப்பரை நோக்கி: ஐயா, ஊரிலே வாழும் அந்த ஐசுவரியமுள்ள மனிதனை பாருங்கள். தேவனை அறிந்திருந்தும், தன் வேலையாட்களை கடுமையாக நடத்துகின்றான். எவருக்கும், சற்றே னும் இரக்கங்காட்டாத கல்மனதையுடையவனாக, தன்னிடத்தில் கடன் பட்டவர்களை கடுமையாக நடத்தி வருகின்றான். மன்னிக்க மனதில் லாத அவனுக்கு, ஏன் இன்னும் தண் டனை கிடைக்கவில்லை என் றான். அதற்கு மேய்ப்பரானவர் அந்த விசுவாசியை நோக்கி: மகனே, கர்த் தர் உருக்கமும், இரக்கமும் நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள் ளவர், அவர் எப்பொழுதும் கடிந்து கொள்ளார்: என்றைக்கும் கோபங் கொண்டிரார். அவர் நம்முடைய பாவங்களுக்குதக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிகட்டாமலும் இருக்கின்றார். (சங்கீதம் 103:) என்று வேதம் கூறுகின்றது. அதன்படிக்கு, அவன் உணர்வடையும்படிக்கு, அவன்மேலும் நீடிய பொறுமையுள்ளவனாக இருக்கின்றார். மனந்திரும்பும்படி அதிக கிருபையை பொழிகின்றார். மனந்திரும்பிய உன்னையும், என்னையும், சொந்த குமாரர்களைப்போல நேசிப்பதால், அவ்வவ்போது, நம் தவறான எண்ணங்களை அறிந்து, கடிந்து சிட்சிக்கின்றார். அதிகமாய் பெற்றவன், அதிகம் கணக்கு கொடுக்க வேண்டும். அதுபோல, அந்த மனிதனுக்கு கொடுக்கப்பட்ட கிருபையின் நாட்களை அவன் விருதாவாக்கினால், அவன் அதைக் குறித்து கணக்கு கொடுக்கும் நாள் உண்டு. பிதாவாகிய தேவனின் சித்தத்தை நிறைவேற்றுகின்றவர்களுக்கு, பரலோக ராஜ்யம் நிச்சயமாக இருக்கின்றது போல, அநியாயம் செய்கின்றவர்களுக்கு நியாயத்தீர்ப்பு நிச்சயம். இதை நாங்கள் பரிசுத்து வேதாகமத்திலே காணலாம் என்று பதிலளித்தார். பிரியமான சகோதர சகோதரிகளே, தேவ கிருபையை நீங்கள் விருதாவாக்கதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஒருவனும் கெட்டுப்போகமல் நித்திய ஜீவனையடைய வேண்டும் என்று அவர் நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார். கிருபையின் நாட்களிலே வாழும் சிலாக்கித்தை பெற்ற நீங்கள், நாட்களை விரயப்படுத்தாமல், காலத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள். தேவ வார்த்தையின் வெளிச்சத்திலே உங்களை ஆராய்ந்து பாருங்கள். தேவனுடைய நீடிய பொறுமையை அற்பமாக எண்ணாதிருங்கள்.
ஜெபம்:
என் இருதயத்தை ஆராய்ந்து அறிகின்ற தேவனே, நீர் என்னை ஆசீர்வதிக்கின்றீர் அதனால் நான் செய்வதெல்லாம் சரி என்ற சுய கொள்கையோடு வாழாமல், உம் வார்த்தையின் வெளிச்சத்திலே நடக்க கிருபை செய்வீராக இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - லூக்கா 13:8-9