புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 16, 2025)

மனப்பூர்வமான மன்னிப்பு வேண்டுமா?

மத்தேயு 18:35

நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.


இரக்கத்தையும், மன்னிப்பையும், குறித்து விளக்கிக்கூறும்படிக்கு, பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்க வேண்டுமெ ன்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது என்ற உவமையை ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். இதை மத்தேயு 18:23-35 முழுமையாக வாசிக்கலாம். அந்த உவமையின்படி, ராஜாவின் ஊழி யன் ஒருவன், தன் வாழ்நாள் முழு வதும் வேலைசெய்தாலும் கட்டித் தீர்க்க போதத அளவிற்கு கடன்ப ட்டிருந்தான். அவனுக்குண்டான எல்லாவற்றையும் விற்று கடனை தீர்க்கும்படி ராஜா கட்டளையிட் டான். அப்பொழுது அந்த ஊழிய க்காரன் தாழ விழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உம க்கு கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான். அந்த ஊழியக்காரனுடைய ஆண் டவன் மனதிரங்கி, அவனை விடுதலை பண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறபட்டுப் போகையில், தன்னிடத்தில் சில கிழமைகளில் உழைத்து தீர்க்கக்கூடிய கடன்பட்ட தன் உடன் வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு, அவ னை ப்பிடித்து? தொண்டையை நெரித்து: அவனுக்கு இரக்கங்காட்ட சம்மதியி ல்லாமல்? அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்ககுமளவும் அவனைக் காவலில் போடுவித்தான். நடந்ததை அவன் உடன் வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தல் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள். அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழை ப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக் கொண்ட படியினால், அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்க வேண்டாமோ என்று சொல்லி, அவனுடைய ஆண்டவன் கோப மடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்து தீர்க்கு மளவும் உபாதிக்கறவர்களிடத்தில் அவனை ஒப்புக் கொடுத்தான். பிரிய மானவர்களே, நம்முடைய ஆத்துமா பாதாளத்திற்கு இறங்காத படிக்கு, தம்முடைய ஒரே போறான குமாரானாகிய இயேசுவை கொடு த்தார். எத்தனை குற்றங்களை இப்போதும் மன்னித்து கொண்டி ருக்கின்றார். அப்படியானால், நாம் எவ்வளவு அதிகமாக மற்றவர்களுடைய குற்றங்களை மன்னிக்க வேண்டும் என்பதை சிந்தித்து செயற்படுங்கள்.

ஜெபம்:

எனக்காகவும் உம்முடைய திருக்குமாரனை பலியாக ஒப்புக் கொடுத்த தேவனே, உம்முடைய நீடிய பொறுமைக்கு நன்றியுள்ளவனாக இருக்கும்படிக்கு, மற்றவர்களுக்கு இரக்கங்காட்டும் உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 6:38

Category Tags: