புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 15, 2025)

ஒரே குற்றத்தை திரும்ப செய்பவன்

எபேசியர் 4:32

ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்க ளும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.


மன்னிக்க மனதில்லாதவனும், நல்லிணக்கத்திற்கு உடன்படதவனுமாகிய கடின மனதுள்ள சகோதரனைக் குறித்த காரியத்தை நேற்ற நாளிலே தியானம் செய்தோம். குற்றம் செய்த சகோதரனொருவன் உங்களிடம் மன்னிப்பை கேட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும். ஒரு முறை மன்னித்து மறந்து விட்டேன், இரண்டாம் தடவை அதே குற்றத்தை மன்னித்தேன். இது மூன்றாவ தும் கடைசி முறையும் என்று கூறிவிட்டால சரியாகுமோ? ஒரு சமயம் ஆண்டவர் இயேசுவின் பிரதான அப்போஸ்தலனாகிய பேதுரு அவரை நோக்கி: ஆண் டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்க வேண்டும்? ஏழுதர மட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதாவது, தம்முடையவர்கள் எப்போதும் மன்னிப்பை வழங்க தயாராக இரு க்க வேண்டும் என்பதைக் குறித்து ஆண்டவராகிய இயேசு கூறுகின்றார். எழுதுவற்கு, பேசுவதற்கு, பிரசங்கிப்பதற்கு இது இலகுவான காரியமாக தோன்றுகின்றது. ஆனால், மன்னிப்பை வழங்குவது, பொது வாக நடைமுறைச் சாத்தியமற்றதாகவே காணப்படுகின்றது. அதிலும், திரும்ப திரும்ப அதே குற்றத்;தை மன்னிப்பது மிக கடினமான காரியமாகவே உள்ளது. பிரியமான சகோதர சகோதரிகளே, பரலோக த்திலே வீற்றிருக்கின்ற நம்முடைய பிதா, நம்முடைய நிலைமையையும், நம்முடைய பெலத்தையும் அறிந்திருக்கின்றார். அதனால் தான், நாம் செய்து முடிக்க முடியாதவைகளை செய்து முடிக்கும்படிக்கு, சத்திய ஆவியாகிய தேற்றரவாளனை எங்களுக்கு ஈவாக கொடுத்திருக்கின்றார். முதலாவதாக அவர் நம்மு டைய ஆறாத காயங்களை எண்ணை பூசி ஆற்றுகின்றார். உடைந்த உள்ளங்களை தேற்றுகின்றார். பதறிப்போய், நிலைகுலைந்திருக்கும் மனதை அறிந்த அவர், நிதானமாக சிந்தித்து செயல்படும்படிக்கு, அமைதலான ஆவியை கொடுக்கின்றார். மன்னிக்க மனதில்லாமல் குற்றங் குறைகளோடு வாழ்பவர்களின் பரிதாப நிலை மையை உணரச் செய்கின்றார். நாம் பரம பிதாவின் பிள்ளைகள் என் றும், அவருடைய நாமம் நம் வழியாக மகிமைப்படும்படிக்கு வழிநடத் துகின்றார். அவர் நம்மை தேவ சாயலிலே வளரப் பண்ணுகின்றார்.

ஜெபம்:

பரலோக தேவனே, உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவின் திவ்விய சாயலிலே நாளுக்கு நாள் வளர்ந்து பெருகும்படிக்கு, என்னை பெலப்படுத்தி, உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்திலே வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - புலம்பல் 3:22