தியானம் (ஆடி 14, 2025)
கடின இருதயமுள்ள சகோதரர்கள்
எபிரெயர் 12:14
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்;
இரக்கம் செய்தல், மன்னிப்பு, ஒப்புரவாகுதல் போன்ற சிறப்பு சுபாவ ங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடித்தளமாக இருக்கின்றது. தாங்கள் இரட்சிப்படைந்தவர்கள், மறுபடியும் பிறந்தவர்கள், வேறு பிரிக்கப்பட் டவர்கள் என்று கூறிக்கொள்ளும் விசுவாசிகளில் சிலரின் வாழ்க்கை யில், ஆண்டுகள் கடந்து சென்று, நூற்றுக் கணக்கான பிரசங்களையும், வேதப்படிப்புகளை கேட்ட பின்பும், அவர்களுடைய வாழ்க்கையிலே இரக்கம், மன்னிப்பு, ஒப்புரவாகு தல் போன்ற அடிப்படை கிறிஸ் துவின் சுபாவங்கள் காண்பதா னது மிகவும் அரிதாக இருக்கின் றது. இவர்கள் எப்போதும் எதிர் த்து நிற்கின்றவர்களும், விதண் டாவதாம் பண்ணுகின்றவர்களும், இணங்காதவர்களும், சபை ஐக் கியங்களிலே குழப்பங்களுக் கும், கலகங்களுக்கும் காரணர்களாகிவிடுகின்றார்கள். மன்னிப்பு கேட் பதோ, மன்னிப்பு வழங்குவதோ இவர்களுடைய அகராதியிலே இல்லை. கர்த்தரோடு உணவு உண்டு, கர்த்தரைப் பற்றி தன் இருதயத்திலே முறுமுறுர்கின்ற யூதா ஸ்காரியோத்தைப் போல, இவர்கள் தேவனுக்கு சாட்சியாக வாழ விரும்புகின்றவர்களின் வாழ்க்கையிலே கறையுண்டு பண்ணுவதிலும், குற்றம் பிடிப்பதிலும் சோர்ந்து போவதில்லை. உன் சகோதர் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் நீ போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவ னுக்கு உணர்த்து அவன் உனக்கு செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக் கொண்டாய். அவன் செவி கொடாமற்போனால் இர ண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவ ரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக் கொண்டு போ. அவர்களுக்கும் அவன் செவி கொடாமற்போனால் அதை சபைக்குத் தெரியப்படுத்து, சபைக்கும் செவிகொடாமற்போனால், அவன் உனக்கு அஞ்ஞானியைப் போலவும், ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். உங்களை நீதிமா னாக காண்பிக்கும் பொருட்டு, இவைகளை செய்யாமல், அமைதலுள்ள ஆவியோடும், நல்லிணக்கமுள்ள மனதோடும் செய்யுங்கள். நாட்களை யும், காலங்களையும் நிதானித்தறிந்து, எல்லாருக்கும் நன்மையுண்டாகு ம்படி, குறைபிடிக்கும் நோக்கத்தோடு அல்ல, ஒப்புரவாக வேண்டும் என்ற நோக்கத்தோடு சமாதானத்தை நாடுங்கள். தேவ ஆவியானவர் தாமே உங்களை வழிநடத்திச் செல்வாராக.
ஜெபம்:
மனதுருக்கின்ற தேவனே, குற்றம்பிடிக்கும் மனதோடு ஒப்புரவாகுதலை நாடாமல், தேவ ஆவியானவரின் வழிநடத்துதலோடு, நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்ற நோக்த்தோடு செயற்படும்படிக்கு என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 18:21-22