புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 13, 2025)

எந்த அளவினால் அளக்கின்றீர்கள்?

மத்தேயு 7:2

ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக் கிற அளவின்படியே உங்களு க்கும் அளக்கப்படும்.


'கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்' (ரோமர் 12:18) என்ற வேத வார்த்தையை குறித்து உங்கள் மனநிலை எப்படியாக இருக்கின்றது. சில விசுவாசிகள், இந்த வார்த் தையை தங்கள் மனதில் இருக்கும கசப்பு மற்றும் பிரிவினையை நியா யப்படுத்தி, விசுவாசிகள் முன்னிலையில் தங்களை நீதிமானாக காட் டும்படிக்கு கூறிக் கொள்கின்றார் கள். நான் முயற்சித்தேன் ஆனால் முடியவில்லை என் கடமை தீர்ந் தது என்று கூறிக் கொள்கின்றார் கள். இந்த வேத வார்த்தையை மட்டு மல்ல எந்த வேத வார்த்தை யையும் எங்கள் வாழ்வின் பெல வீனங்களையும், குறைகளையும் மூடி மறைப்பதற்கும், கிறஸ்தவ சுபாவங்களை விட்டுவிடுவதற்கும் சாட்டுப் போக்கான வார்த்தைகள் அல்ல. மன்னிப்பைக் குறித்து உங்கள் மனதிலே இருக்கும் எண்ணங்க ளுடன், இன்னும் இரண்டு காரியங்ளை உங்கள் மனதிலே வைத்திரு ங்கள். 1. எங்களுக்கு எதிராக குற்றம் செய்தவர்களுக்கு நாங்கள் மன் னிக்கின்றது போல, எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும் என்று கர்த்தர் கற்பித்துக் கொடுத்திருக்கின்றார். (மத்தேயு 6:12) 2. நீங்கள் எந்த அளவினால் அளக்கின்றீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கு அளக்கப்படும் என்கின்ற சத்தியத்தையும் மறந்து போய்விடாதிருங்கள். (லூக்கா 6:38). மனிதர்களால் கூடாத காரியங்கள் அநேகம் உண்டு. விசுவாசிகளாகிய நம்முடைய வாழ்க்கையிலும் நம்மால் கூடாத காரியம் பல உண்டு. அவற்றுள், நமக்கு அவசியமானவைகளை செய்து முடிக்கு ம்படி, நம்முடைய பெலவீனங்களிலே உதவி செய்யும் துணையாளரு டைய உதவியை நாடி நிற்கின்றோம். ஊக்கமாக ஜெபிக்கின்றோம். சில வேளைகளிலே உபவாசிக்கின்றோம். நாம் அதை எப்படியாவது செய்து முடியக்க வேண்டும் என்ற எண்ணமும், மன வாஞ்சையும் நம்மிடத்திலே இருப்பதே அதன் காரணமாக இருக்கின்றது. மன்னிப்பை வழங்குவதற் கும், மன்னிப்பை பெற்றுக் கொள்வதற்கும், இது என் பெலத்திற்கு அப்பாற்பட்டது என்று முற்றுப்புள்ளி வைக்காமல், தேவனால் எல்லாம் கூடும் என்ற மனநிலையோடு அவரிடத்திலே யாவற்றையும் ஒப்புக் கொடுக்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது, அவர் தம்முடைய சித்தமானது நம்மில் நிறைவேறும்படிக்கு நம்மை வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்:

மன்னிக்கும் பரலோக தகப்பனே, என் மனதின் எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம் உமக்கு மறைவானவைகள் அல்லவே. அவை உமக்கு பிரியமாக இருக்கும்படிக்கு என்னை உம் வழியிலே நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:14