புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 12, 2025)

இரக்கமும் நீதியும்

லூக்கா 6:36

ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்க முள்ளவர்களாயிருங்கள்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த வாலிபனொருவன், தன்னுடைய மோட்டார் வண்டியை, வேகமாக ஓட்டிச் சென்றதால், ஊரிலுள்ள குறிப்பிட்ட ஒரு மனி தனுடைய வகனத்தோடு மோதியதால், அந்த மனிதனுடைய வாகனத் தின் பின்பக்கதில் சிறிய சேதம் ஏற்பட்டுவிட்டதால், அவன் அந்த வாலிபன் மேல் கோபம் கொண்டு, பிரச்சனைகளை முளையிலே கிள்ளி விட வேண்டும். இளவயதி லேயே நல்ல பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று, சட்டப்படி அவனு க்குரிய தண்டனை கிடைக்க வேண் டும், சேதத்திற்குரிய அபராதம் முழு மையாக செலுத்தப்பட வேண் டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந் தான். அந்நாட்களிலே, அதே மனித னுடைய மகனானவன், தன் நண்பர்களோடு, கடற்கரையோரமாக சென்று, மதுபானம் அருந்திய பின்பு, ஊரிலுள்ள சில வாலிபர்களோடு சண்டை செய்து, அவர்களை அடித்து காயப்படுத்தி விட்டான். செய்தியானது தகப்பனானவருக்கு அறிவிக்கப்பட்ட போது, அவனும் அவனுடைய மனைவிலும், காயப்பட்ட வாலிபனுடைய வீட்டிற்கு விரைந்து சென்று, தங்களுடைய மகனானவன், குடித்து வெறிப்பவனல்ல. அவனுடைய நண்பர்களே இப்படியான நிலைக்கு அவனைத் தள்ளிவிட்டார்கள். இது வாலிப வயது, இளம் இரத்தம், இவைகளை நாம் பாரமுகமாக விட்டு விட வேண்டும் என்று காயப்பட்ட வாலிபனின் பெற்றோரோடு தயவாய் பேசினார்கள். நித்திய ஜீவனுக்கென்று அழைக்கப்பட்ட பிரியமான சகோதர சகோதரிகளே, நீங்கள் இந்த சம்பவங்களுக்கு நீதிபதியாக நடுநிலை வகிக்கும்படி நியமிக்கப்பட்டால், மேற்கூறிப்பிட்ட சம்பவங் களை குறித்து உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? பரலோக த்திலிருக்கும் நம்முடைய தேவனிடத்திலே மிகுந்த இரக்கங்கள் உண்டு. ஆனால், அவர் பாரபட்சமுள்ளவரல்ல. அவர் நீதியுள்ள தேவன். நான் குற்றம் செய்யும் போது இரக்கமுள்ள நீதியும், மற்றவன் குற்றம் செய்யும் போது மனகடினமுள்ள நீதியும் வேண்டும் என்று கேட்பது அநியாயம். எனவே, முதலாவதாக, மற்றவர்கள் உங்களுக்கு எதிராக குற்றம் செய்யும் போது, கடினமான சூழ்நிலை மத்தியிலும் நீங்கள் இரக்கத்தை காண்பிக்க கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது, நீங்களும் இரக்கத்தை பெற்றுக் கொள்வீர்கள். அப்படி செய்வதால், பரம பிதா உங்கள் வழியாக மகிமைப் படுவார். தேவ சமாதானம் உங்கள் இருதயத்தை ஆண்டு கொள்ளும்.

ஜெபம்:

பட்சபாதமில்லா நீதியின் தேவனே, இக்கட்டான சூழ்நிலைகளிலும், நான் என் இருதயத்தை உம்முடைய வார்த்தைக்கு எதிராக கடி னப்படுத்தாதபடிக்கு, மனதுருக்கும் இருதயத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 2:11