தியானம் (ஆடி 11, 2025)
நாங்கள் மன்னிக்கிறதுபோல...
மத்தேயு 6:12
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
நாம் பரலோகத்திலே இருக்கின்ற பிதாவாகிய தேவனாகிய கர்த்தரை நோக்கி: எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும் என்று வேண்டிக் கொள்ளும்போது, கடன்கள் என்கின்ற பதத்தின் கருப்பொருள் என்ன? பொருளாதாரம் சார்ந்த கடன்களா? அல்லது கொடுக்கப்பட்ட பணத்தை சரியான முறையில் செலவழிக்க தவறிய கடனா? இல்லை, எங்கள் வாழ்வின் நாங்கள் அறிந்தோ அறியாமலோ செய்த குற்றங் குறைகளை குறிக்கின்றது. ஆண்டவராகிய இயேசு, தம்முடைய சீஷர்களு க்கு ஜெபிக்க கற்றுக் கொடுக் கும் போது, மன்னிப்பைக் குறி த்து வேண்டுதல் செய்யும் போது, தேவஇரக்கத்தை வேண் டிநிற்பவர்கள், முதலாவதாக, மற்றவர்களுக்கு அந்த இரக்கத்தை காண்பிக்க வேண்டும் என்பதை குறி த்து சுட்டிக் காட்டுகின்றார். பொதுவாக மனிதர்கள், நாட்டின் சட்டதிட்ட ங்களை மீறி எதிராக குற்றம் செய்யும் போது, அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று தங்கள் அபிப்பிராயங்களை திட்ட மாக தெரிவித்துக் கொள்கின்றார்கள். ஆனால், தாங்கள் அல்லது தங்க ளுக்கு அன்பானவர்கள், அதே குற்றங்களிலே அகப்படும் போது, இரக் கத்தை காண்பிக்க யாராவாது இல்லையா என்று ஏங்கி நிற்கின்றார்கள். நம்முடைய பரம தந்தையாகிய நம் தேவன், இரக்கத்தில் ஐசுவரியமு ள்ளவராக இருக்கின்றார். இந்த பூவுலகிலே இருக்கும் நல்ல தகப்ப ன்மார், தங்களுடைய பிள்ளைகள் வளர்ந்து வரும் போது தங்களைப் போல மாற வேண்டும் என்று விரும்புகின்றார்கள். அதுபோலவே, நம் முடைய பரம தந்தையும், நாம் அவரைப் போல மாற வேண்டும் என்று விரும்புகின் றார். அவர் எங்களுடைய குற்றங்களை மன்னிப்பது போல நாங்கள் மற்றவர்களுடைய குற்றங்களை மன்னிக்க வேண்டும் என்று கூறாமல், எங்களுக்கு எதிராக குற்றம் செய்தவர்களுக்கு நாங்கள் மன் னிக்கின்றது போல, எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும் என்று கூறியிருக்கின்றார். எனவே, தேவனுடைய சமூகத்திற்கு நாம் ஜெபத்தி ற்காக செல் லும் போது, பட்சபாதமுள்ள மனதோடு செல்லக்கூடாது. ஒரு இரவிலே, நாம் தேவனைப் போல மாறவேண்டும் என்று அவர் கூறவில்லை, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சூழ்நிலையிலும், நம்மு டைய மனம் புதிதாக்கப்படும்படிக்கு, துணையாளராகிய தேவஆவியா னவர், நம்மோடு இருந்து நம்மை வழிநடத்திச் செல்ல ஆயத்தமுள்ள வராக இருக் கின்றார். நாம் ஆயத்தமாக இருக்கின்றோமா?
ஜெபம்:
இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, மற்றவர்கள் எனக்கெதிராக செய்யும் குற்றங்களை நான் மன்னித்து மறந்து விடும், தெய்வீக சுபாவமானது, நாளுக்கு நாள் என்னில் வளர கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 7:12