தியானம் (ஆடி 10, 2025)
தேவனில் நம்பிக்கையாய் இருப்பேன்
யோவான் 6:51
நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்;
நாம், ஏழைகள் மற்றும் வறியோரை தெருவிலே சந்திக்கும் போது, நீ ஆண்டவர் இயேசுவை தேடு அப்போ து உனக்கு எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடும் என்று நீண்ட பிரசங்கங்களை செய்வதற்கு முன்னதாக, தேவ தயவை அவர்களுக்கு, செய்கை வழியாக காண்பிக்க வேண்டும் என்பதைக் குறித்து கடந்த நாட்களிலே தியானம் செய்தோம். ஆனால், ஒரு விசுவாசியானவன், ஆண்டவர் இயேசுவை அறிந்த பின்பும், இம் மைக்காகமாத்திரம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையுள்ளாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்ப டத்தக்கவனாயிருப்பான் (1 கொரி 15:19). தேவஜனங்கள் வனாந்தி ரத்திலே இருந்த நாட்களிலே, அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட் டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து, 'மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷpக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். தூதர்களின் அப் பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார்.' (சங்கீதம் 78:23-25). இதன் வழியாக ஒரு விசுவாசி என்னத்தை கற்றுக் கொள்ள வேண்டும்? தேவனால் கூடாதது ஒன்றுமி ல்லை என்பதை தன் இருதயத்திலே விசுவாசித்து, யுத்த காலங்களிலே, பஞ்சமான நாட்களிலே, அதை தன் வாயினாலே அறிக்கையிட வேண் டும். அந்த வளர்ச்சியானது ஒரு விசுவாசிக்குள் இருக்கும்படிக்கு, அவன் அன்றாட ஆவிக்குரிய ஆகாரத்தை உட்கொண்டு, தேவனிலே உறுதி யாக நிலைத்திருக்க வேண்டும். அன்றாட ஆவிக்குரிய ஆகாரத்தை உட் கொள்கின்றவன், தேவனையும், அவருடைய ராஜ்யத்தையும் வாஞ்சிக் கின்றவனாக இருக்கின்றான். அவன் வாயிலே தேவனை துதிக்கும் துதி எப்போதும் இருக்கும். தேவ சித்தத்திற்கு தன்னை ஒப்புக் கொடு க்கின்றவனாக இருப்பான். அவன் தன் சரீரத்தின் தேவைகளை குறித்து அதிகமாக அலட்டிக் கொள்ள மாட்டான். ஏனெனில், தன்னை அழைத் தவர் உண்மையுள்ளவர் என்றும், அவரே தம்முடையவர்களை போஷp க்கின்றவர் என்றும் அறிந் திருக்கின்றான். அவன் வாயில், 'அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போ னாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானி யத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தை கள் முதல ற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன் என்ற அறிக்கை இருக்கும்.
ஜெபம்:
உண்மையுள்ள தேவனே, இந்த உலகத்திலே என்னதான் நடந்தாலும் நீர் என்னை கைவிடாமல் நடத்தி, முடிவிலே மகிமையிலே உம்மோடு சேர்த்துக் கொள்வீர் என்ற நிச்சயத்தோடு வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 93:5