தியானம் (ஆடி 09, 2025)
அனுதின வார்த்தையில்லாத வாழ்வு
மத்தேயு 6:11
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
தந்தையின் பத்திமதியை கேளாதவன், தன் வாழ்விலே தவிர்க்கக்கூடிய பாதகமான பின்விளைவுகளை சந்தித்துக் கொள்கின்றான். ஒரு குமார னுக்கு திரளான ஆஸ்தி இருந்தாலும், அவன் தன் பரம தந்தையின் உறவை விட்டு தூரமாக போகின்ற வேளையிலே, தன் சொத்துக்களை அழித்து, தன் வாழ்வை கெடுத்துக் கொள்கின்றான். 'ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளை யவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ் தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். சில நாளைக்குப்பின்பு, இளைய மகன் எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்ப ட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான். எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி, அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையா யிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.' பிரியமா னவர்களே, என்னிடம் திரளாக செல்வம் உண்டு எனக்கு தேவ பக்தி தேவையில்லை, ஏழைகளுக்கே தேவபக்தி அவசியம் அவர்களே 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.' என்று ஜெபிக்க வேண்டும் என்று சிலர் செல்வந்தர்கள் தங்கள் அறியா மையிலே சொல்லிக் கொள்கின்றார்கள். வறுமையிலே வாழ்கின்ற வர் கள் இந்த உலக போக்கிலே அதிக காரியங்களை செய்யவோ, சாதி க்கவோ முடியாது. ஆனால், திரளான ஆஸ்திகள் உடையவன், இந்த உலக போக்கிலே அநேக காரியங்களை செய்து, ஏழைகளுக்கு செய்ய முடியாத பல காரியங்களை சாதித்துக் கொள்ளலாம். ஆனால், அவை யெல்லாம் விரயமாகும். அவைகள் ஒன்றும் ஒருவனுக்கு நித்திய ஜீவனை கொடுப்பதில்லை. இந்த உலக செல்வமானது, ஒருவனை அடிமை ப்படுத்தி, கேட்டிற்குள் அவனை தள்ள முன்னதாக, அவன் தன் பரம தந்தையோடு அனுதினமும் உறவுள்ளவான இருக்க வேண் டும். அப்போது அவர் அவன் நடக்க வேண்டிய வழியை அவனுக்கு போதித்து கொடுப்பார்.
ஜெபம்:
அன்பின் பரலோக தந்தையே, உம்மைவிட்டு தூரமாக போகும் எண்ணம் என் இருதயத்தைவிட்டு தூரமாக போகச் செய்யும். நான் எப்போதும் உம்முடைய புத்திமதிகளை கேட்டு நடக்க எனக்கு தெளிந்த சிந்தையை தந்தருளும். இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 32:8