புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 08, 2025)

வாழ்வு தரும் வார்த்தை

யோவான் 15:6

ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்;


தேவனாகிய கர்த்தர்தாமே தம்முடையவர்களை என் ஜனங்கள், மேய்ச்சலின் ஆடுகள், பிள்ளைகள், சீஷர்கள், போர்ச்சேவகன், ஊழியன் என்று பலவிதமாக அழைத்திருக்கின்றார். சமுதாய அளவுகோலின்படி உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுகள் இல்லாமல், ஜனங்கள் ராஜா சொல்வதை கேட்பார்கள். மந்தையானது தன் ஆயன் நடத்தும் இடத்திற்கு செல்லும், பிள்ளைகள் தங்கள் தகப்பனானவரின் சொல்லை கேட்பார்கள். சீஷர்கள் தங் கள் குருவுக்கு பின் செல்வார்கள். ஊழியன் தன் எஜமானன் விரும்பி யதை செய்வான். 'திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறா னேயன்றிவேறொன்றுக்கும் வரான்' என்பதினாலே, மேய்ப்பனாகிய இயே சுதாமே, தன்னுடையவர்கள் அவனு டைய தந்திரமான வஞ்சகத்திற்கு தப்பித்துக் கொள்ளும்படிக்கு, தன்னிலே தங்கி வாழும்படிக்கு ஆலோ சனை கூறுகின்றார். கிழமைக்கு வருடத்திற்கு இரண்டு முறைகள் அல்ல. ஒரு தடவையல்ல, திருமண நாள், மரண வீட்டில் மாத்திரமல்ல, அனு தினமும், வார்த்தையிலே நிலைத்திருக்கும்படி கூறுகின்றார். 'நான் மெய் யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். தன்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகி றார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடு க்கும்படி, அதைச் சுத்தம்பண் ணுகிறார். நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள். என் னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடி யானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது (யோவான் 15:1-6).' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். இது அவருடைய நலனுக்காக அல்ல. அவர் எப்போதும் சம்பூரணராகவே இருக்கின்றார். அவர் நம்மேல் வைத்த அன்பினாலே, நம்முடைய நன்மைக்காக எந்த சூழ்நிலையிலும் தம்மு டைய வார்த்தையில் நிலைத்திருக்கும்படி கூறுகின்றார். அவருடைய வேதத்தை பின்பற்றுகின்றவர்கள் கண்ணிகளுக்கு தங்களை விடு வித்துக் கொள்கின்றார்கள்.

ஜெபம்:

கசகலமும் படைத்த தேவனே, நீரில்லாமல் எனக்கு வாழ்வு இல்லை என்ற சத்தியத்தை அறிந்து, உம்முடைய வார்த்தையிலே நிலைத்திருக்கும்படிக்கு எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 91:3