புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 06, 2025)

அழியாத போஜனம்

யோவான் 6:27

அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப் பியுங்கள்;


ஆண்டவராகிய இயேசுதாமே, ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்க ளையும் பலுகச் செய்து, ஏறத்குறைய ஐயாயிரம் புருஷர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோரை போஷpத்தார். இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள். ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜா வாக்கும்படிப் பிடித்துக் கொண்டு போக மனதாயிருக்கின்றார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகிப்போனார். ஏறினார். அவர்களோ அவரை பின்தொடர்ந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னை தேடுகின்றீர்ளென்று சொல் லுகிறேன். அழிந்து போகிற போஜனத்திற்காக அல்ல, நித்திய ஜீவன்வரைக்கும் நிலைநிற்கின்ற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்: அதை மனுஷகுமாரன் உங்களுக்கு கொடுப்பார் என்றார். நித்திய ஜீவனுக்கென்று வேறு பிரிக்கப்பட்ட அருமையான சகோதர சகோதரிகளே, தேவனாகிய கர்த்தர்தாமே நம்முடைய சரீத்திற்கு தேவையான ஆகார த்தை கொக்கின்றார். அது தம்முடைய பிள்ளைகளுக்கு தேவை என்று அறிந்திருக்கின்றார். ஆனால், அதை கொடுக்கும்படியாகவா, தம்முடைய ஒரேபேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார்? இல்லை, அவரை விசுவசிப்பன் எவனும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கே அவரை இந்த உலகத்திற்கு அனுப்பினார். ஆனால், பலர், தங்கள் ஆத்துமாவிற்காக அல்ல, வயிற்றுக்காகவே ஆண்டவர் இயேசுவை தேடி, அவரைப் பின்பற்ற ஆவலாக இருந்தார்கள். இன்றும் மனிதர்கள் தங்கள் பிள்ளைகளைபடிக்க வைக்கின்றார்கள். கைநிறைய உழைத்து வசதியாக வாழ வேண்டும் என்று நல்ல வேலைளை தேடுகின்றார்கள். அதை கண்டடைந்த பின்னர், இன்று நாள் என்ன, மாதம் என்ன என்றும் தங்கள் தேவை இன்னதென்றும் அறியாமல் மனிதர்கள் தங்கள் தேவைகளுக்காக அயராது உழைக்கின்றார்கள். தேவன் தங்களை ஆசீர்வதித்திருக்கின்றார் என்று சாட்சி கூறுகின்றார்கள். ஆனால், தேவனுடைய ராஜ்யமும் அதன் நீதியுமே முதன்மையானது என்பதை மறந்து போய்விடுகின்றார்கள். நாம் அப்படியாக எண்ணங் கொண்டு, வழி தவறிப் போய்விடாதபடிக்கு, நம்முடைய பரம இலக்கை முதன்மைப்படுத்தி, அதை பெற்றுக் கொள்ளும்படி முன்னேறுவோமாக.

ஜெபம்:

அழியாத நித்திய ராஜ்யத்திற்கென்று என்னை அழைத்த தேவனே, நான் அழிந்து போகும் உணவிற்காக அல்ல நித்திய ஜீவன்வரைக்கும் நிலைநிற்கும் போஜனத்தை வாஞ்சிக்கும் இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 13:14