புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 05, 2025)

கருத்துள்ள வாழ்க்கை

பிலிப்பியர் 4:12

தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே, இந்த உலகிலே வாழ்ந்த நாட்களிலே, தம்முடைய திருப்பணியை வெளியரங்கமாக ஆரம்பிக்கும்படி, யோவானஸ்நானால் ஞானஸ்நானம் பெற்ற பின்பு, இரவும் பகலும் நாற்பது நாட்கள் உபவாசம் இருந்த பின்பு, அவருக்கு பசி உண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவ னுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தாரமாக: மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகின்ற ஒவ்வவொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். பிரியமான சகோதர சகோதரிகளே, ஒரு நேரச் உணவு தாமத்திக்கும் போதே பசி உண்டாகி விடுகின்றது. நாற்பது நாள் உபவாசத்திற்கு பின், ஆண்டவர் இயேசுவிற்கு பசி எப்ப டியாக இருந்திருக்கும் என சிந்த்தித்துப் பாருங்கள். அந்த இடத்திலே சரீத்த்திற்கு அத்தியவசியமான தேவையொன்று இருந்தது. அந்த வேளையிலே எதிரியாகிய பிசாசானவன் அவருக்கு ஆலோசனை கூறு கின்றான். அவருடைய பசியை தீர்க்க வழியை காண்பிக்கின்றான். ஆனால், எந்த வேளை யிலும் நாம் பிசாசானவனுக்கு இடம் கொடுக்க கூடாது என்பதை குறித்து தம்முடைய வாழ்க்கையின் அனுபவம் வழியாக ஆண்டவர் இயேசு தாமே நமக்கு கற்றுக் கொடுக்கின்றார். எந்த நிலையிலும் நாம் சரீர தேவைகளுக்காக நம்முடைய ஆத்துமாவை இழந்து போய்விடக் கூடாது. எலியாவை போஷpக்க தேவ தூதனை அனுப்பினார். பின்பு காகத்தின் வழியாக அவனை போஷpத்தார். மீண் டும், அவனை போஷpக்க ஏழை விதவையை ஆயத்தப்படுத்தியி ருந் தார். அதே வேளைலே, அவருடைய நாமத்தின் நிமித்தம், நிறைவாக இருக்கவும், குறைவு படவும், வயிராற உண்ணவும் பட்டினி கிடக்கவும், எல்லாச் சூழ்நிலை களிலும் அவருக்குள் மனரம்யமாக இருக்கவும் தம்முடையவர்களுக்கு கற்றுக் கொடுக்கின்றார். அதாவது, அழிந்து போகும் சரீரத்தின் தேவைகள், அழியாத ஆன்மீக தேவைகளுக்கு ஒப்பானவைகள் அல்ல. ஒரு விசுவாசியானவன், இரண்டின் ஒன்றை தெரிவு செய்யும்படியான நிலைமைக்கு தள்ளப்பட்டால் நாம் அழியாத ஆன்மீக தேவைகளையே முதன்மைபடுத்த வேண்டும்.

ஜெபம்:

ஜெபம்: முடிவில்லா வாழ்விற்கென்று என்னை அழைத்த தேவனே, மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு கிரியைகளை நடப்பிக்காமல், முழு இருயத்தோடு உம்மை சேவிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:15-16