தியானம் (ஆடி 04, 2025)
கிறிஸ்துவுக்கு பிரியமானவைகள்
மத்தேயு 25:40
மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறு ங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களு க்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். (யாக் கோபு 2:15-16). என்று கிரியையில்லாத விசுவாசத்தைக் குறித்து தேவ ஊழியராகிய யாக்கோபு விளக்கிக் கூறியிருக்கின்றார். இன்று சிலர் ஆவிக்குரிய காரியங்கள் என்று அவைகளை குறித்து பிரசங்கித்து, மனிதர்களுடைய அடிப்படை தேவைகளை பராமுகமாகவிட்டுவிடுகின்றார்கள். இன்னும் சிலர், தங்களுக்கென்றும், தங்கள் சந்ததிக்கென்றும் மிகையாக சேர்த்து வைத்துவிட்டு, அன்றாட தேவைகளுக்காக பிரயாசம்படும், உடன் சகோதரர்களின் தேவைக ளையும் அதன் அவசியத்தையும் குறித்து மறந்து போய்விடுகின்றார்கள். 'அன்றியும் மனுஷமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வௌ;வேறாக பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங் கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனா யிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;. வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.' எனவே ஆவிக்குரிய வாழ்க்கை என்று அடிப்படைக் காரியங்களை மறந்து போய்விடாதிருங்கள்.
ஜெபம்:
பரலோக தேவனே, உமக்கு பிரியமான ஆவிக்குரிய காரியங்கள் இன்னதென்று அறிந்து அதன்படிக்கு உமக்கு ஏற்புடைய கிரியைகளை நடப்பிக்க என்னை உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யாக்கோபு 1:27