தியானம் (ஆடி 03, 2025)
நல்ல மேய்ப்பன்
சங்கீதம் 23:1
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.
'பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல் லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறு பிள்ளையாயிருக்குங் காலமளவும், தகப்பபன் குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்கா ரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான். அவன் வளர்ந்து தன் சுதந்திரத்திற்கு அதி காரியாவான். அவன் புத்திரனாக வள ர்ந்து, தான் செய்ய வேண்டியவை கiளா நிறைவேற்றுவான்.' அதா வது, ஒரு பிள்ளையானது, குழந் தையாய் இருக்கும் போது, அக்குழ ந்தையின் வாழ்வில் பிரதான நோக் கத்தை பெற்றோர் சொல்லிக் கொடுப்பதில்லை. மாறாக, அக்குழந்தை க்கு பாலூட்டி, தாழாட்டி, பாதுகாத்து பொறுமையோடு வளர்க்கின்றா ர்கள். அந்த பிள்ளையானது வளர்ந்து வரும்போது, அது நடக்க வேண் டிய வழியை காண்பிக்கின்றார்கள். பிள்ளையானது, குமாரனாகும் போது, தன் வாழ்வில் நோக்கத்தை, அறிந்து, உணர்ந்து அதை நிறை வேற்றுவான். அதுபோலவே, சில தேவ பிள்ளைகள், தங்கள் ஆரம்ப காலங்களிலே, உணவைக் குறித்தும், உடையைக் குறித்தும், உறை யுளைக் குறித்தும் கவலடையடைந்து, முறுமுறுத்து, தேவனை நோக்கி விண்ணப்பிக்கின்றார்கள். குழந்தைகளாக இருக்கும் தன்னுடைய பிள்ளைகளின் பெலவீனங்களை அறிந்தமிருக்கின்றார். அவர்களுடைய நிiலைமைய உணர்ந்து அவர்களுடைய சரீர, உலக தேவைகளை சந் தித்து வருகின்றார். நல்ல மேய்பனாக, அவர்கள் செல்ல வேண்டிய இடத்தையும், அதன் வழியையும் அவர்களுக்கு கற்றுக் கொடுகின்றார். இந்த உலகம் அநித்தியாமானது என்றும், இந்த வாழ்க்கை நிலைய ற்றது எனவே சரீரம் அழிந்து போனாலும், ஆத்துமா பாதாளத்தில் அழி ந்து போகக்கூடாது என்பதின் அவசியத்தை உணரும்படிக்கு மனக் கண்களை பிரகாசிப்பிக்கின்றார். குமாரர்களாக, குமாரத்திகளாக வளர் ந்து தேவ வார்த்தையிலே ஊன்றக் கட்டப்பட்டவர்கள், உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்ட யமோ, அவர்களை நோக்கி வந்தாலும், பரம தந்தையின் அழைப்பிலே நிலைத்திருப்பார்கள். நித்தியமான பரலோகத்தை அடைந்து கொள்ளு ம்படிக்கு, தங்கள் ஆத்துமாவை தேவவார்த்தையினாலே காத்துக் கொள் வார்கள். அனுதினமு;, இரவும், பகலும், கர்த்தருடைய வேதமோ அவர் கள் இருதயத்திலும், வாயிலும் இருக்கும். மனிதன் அப்பத்தினால் மாத் திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு வார்த்தை யாலும் பிழைப்பான் என்று திடமனதோடு அறிக்கை செய்வார்கள்.
ஜெபம்:
தாயின் கர்ப்பத்திலே என்னை முன்குறித்து, என்மேல் நீடிய பொறுமையாய் இருக்கும் தேவனே, என் வாழ்வின் அவசியமானதை நான் உணர்ந்து, அதை சீக்கிரமாக பற்றிக் கொள்ள எனக்கு கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ஏசாயா 40:11