தியானம் (ஆடி 02, 2025)
போஷிக்கும் தேவன்
மத்தேயு 15:32
இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்து போவார்களே என்றார்.
கர்த்தர் கற்பித்து கொடுத்த ஜெபத்தை குறித்து இந்நாட்களிலே நாம் தியானித்து வருகின்றோம். எங்கள் பரம பிதா, பரமண்டலங்களிலே இருக்கின்றார். அவருடைய நாமம் பரிசுத்தம். அவருடைய ராஜ்யத்தைக் குறித்த மேன்மையும் வாஞ்சை யும் நம்மில் பெருக வேண்டும். அவருடைய சித்தம் பரலோகத் திலே செய்யப்படுவது போல நம்முடைய வாழ்விலும் செய்ய பட வேண்டும் என்பகைவ ளைக் குறித்து கடந்த மாத த்திலே தியானித்தோம். தேவன், அவருடைய நாமம், அவருடைய ராஜ்யம், அவருடைய சித்தம் இவை களே நம் வாழ்வில் முதன்மையானவைகளாக இருக்க வேண்டும். அதன் பின்னர், நம்முடைய தேவைகளை பரம பிதாவிடம் தெரிவிக் கின்றோம். முதலாவதாக, எங்களுடைய அனுதின உணவை இன்று எங்களுக்கு அளித்தருளும் என்று ஆகாரத்தைக் குறித்து கூறியி ருக்கின்றார். சிலர், இவை யாவும் ஆவிக்குரிய உணவைக் குறித்தது, அதைக் குறித்தே நாம் வாஞ்சிக்க வேண்டும் என்று கூறிக் கொள்கி ன்றார்கள். நம்டைய நினைவுகள், கிரியைகள், யாவும் நித்திய வாழ் வைக் குறித்ததாக இருக்க வேண்டும் என்பது உண்மை. நித்திய ஜீவன்வரைக்கும் நிலை நிற்கும் உணவை நாம் வாஞ்சிக்க வேண்டும். அதில் எந்த மாற்றக் கருத்தும் இல்லை. இதை குறித்து அடுத்து வரும் தியானங்களிலே ஆராய்ந்து அறிந்து கொள்வோம். ஆனால், நம்மு டைய பரமபிதா, நம்முடைய ஆவிக்குரிய தேவைகளை மாத்திரமல்ல, நம்முடைய சரீத்தின் தேவைகளையும் சந்திக்கின்றவராக இருக்கின்றார். ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே, அவ ருடைய வாழ்வு தரும் வார்த்தைகளை கேட்கும்படி திரளான ஜனங்கள் கூடி வந்தார்கள். அவர்களை பசியோடு திரும்ப அனுப்பாமல், அவர் களை வயிராற போஷpத்தார். நாம் உணவு உண்டு, குடித்து, சுகபோ கமாய் வாழும்படிக்கு அல்ல. பிதாவாகிய தேவனின் நாமம் நம் வழி யாக, உலகத்தார் மத்தியிலே மகிமைப்படும்படிக்கு, அவருடைய ராஜ்ய த்தை நாடி, அவருடைய சித்தத்தை நம் வாழ்விலே செய்யும்படிக்கே அவர் நம்மை போஷpத்து வழிநடத்துகின்றார். பிரியமானவர்களே, தேவன் ஒருவரே உங்கள் நிலைமையை நன்றாக அறிந்திருக்கின்றார். எனவே, சிறிதான காரியமோ, பெரிதான காரியமோ அவரிடமாய் சேரு ங்கள். அவரே நம்மை திருப்பதியாக்கி, நாம் செய்ய வேண்டிய வைகiளா நமக்கு கற்றுக் கொடுத்து நடத்துவார்.
ஜெபம்:
பரலோகத்திலிருக்கின்ற எங்கள் பிதாவே, நான் சென்றடையும் என் கோட்டையும், தஞ்சமும், என் துருகமும், என் கேடகமுமாய் நீர் இருப்பதினால் உமக்கு நன்றி. நீர் கொடுக்கும் சமாதானத்திற்காக ஸ்தோத்திரம். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:19