புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 30, 2025)

தேவ சித்தம் நம் வாழ்வில்

யோவான் 15:5

ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்


இலவசமான கிருபையினாலே விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்ப ட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. இப்படியாக புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை உண்டு பண்ணின பிதாவாகிய தேவன்தாமே, தம்முடைய சித்தத்தை மறைபொளாக வைத்து, அதை நீ கண்டு பிடித்து, நிறைவேற்றினால்தான் உனக்கு நித்திய ஜீவன் உண்டு என்று, தம்முடைய சித்தத்தை எவருக்கும் மறைத்து வைக்கவில்லை. என் சித்தப்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். அவர் எனக்கு தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. குமாரனை கண்டு, அவரிடத் தில் விசுவாசிமாயிருக்கிறவன் எவனோ அவன் நித்திய ஜீவனை அடை வதும், நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவதும், என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கின்றது என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே, ஆண்டவராகிய இயேசு கூறியபடி, நாம் தேவனுக்கேற்ற கிரியைகளை நம் வாழ்வில் செய்ய வேண்டும். அந்த கிரியைகள் என்ன? பிதாவாகிய தேவன் அனுப்பின மீட்பராகிய இயேசுவை விசுவாசிப்தே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கின்றது என்று யோவான் ஆறாம் (6) அதிகாரத்திலே வாசிக்கலாம். அப்படியான நாம் மீட்பர் இயேசுவின்மேல் விவாசம் வைக்கும் போது, அவரே நிலைத்திருக்கின்றோம். நாம் அவரிலே ஒட்டப்பட்ட கிளைகளாக இருக்கின்றோம். நாம் அவரிலும் அவருடைய வார்த்தை நம்மிலும் நிலைத்திருக்கும். அப்போது, அவர் விரும்பும் அதிக கனிகளை நாம் கொடுப்போம். அந்தக் கனிகளே நாம் யாருடைய சித்தம் செய்கின் றோம் என்பதை நமக்கும் மற்றவர்களுக்கும் வெளிப்படுத்தும். நாம் பூமிக்கு உப்பாகவும், உலகத்திற்கு வெளிச்சமாகவும் காணப்படவேண் டும். அந்த சாரம் கிறிஸ்து வழியாக நம்மிடத்திலும், கிறிஸ்துவிலே பிர காசித்த அந்த மகிமையின் ஒளியானது நமக்குள்ளும் பிரகாசிக்கின்றது. இவையெல்லாம் நம்முடைய மகிமைக்காக அல்ல, நம் கனிகளின் வழியாக பரம பிதா மகிமையடைய வேண்டும். எனவே, தேவ சித்த மானது பரலேகத்திலே செய்யப்படுவது போல, நம் வாழ்க்கையிலும் செய்யப்படும்படிக்கு நம்மை ஒப்புக் கொடுத்து, கருத்தோடு பிதாவாகிய தேவனை நோக்கி அறிக்கையிடுவோமாக.

ஜெபம்:

பரலோக தேவனே, நான் வார்த்தையாகிய உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவிலே நிலைத்திருந்து, உமக்கேற்ற கனிகளை கொடுக்கும்படி, வார்த்தையிலே நிலைத்திருக்க எனக்கு கிருபை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:10