புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 17, 2025)

தேவ ராஜ்யத்தை நாடுங்கள்

அப்போஸ்தலர் 17:27

கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.


கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்கு பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று முன்னறிக்க வந்த தீர்க்கதரிசியாகிய யோவா ன்ஸ்நானன், ஜனங்களை நோக்கி: பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான். பரலோக ராஜ்யம் எப்படி நமக்கு சமீபமாயிற்று? அப்படியானால் அது எப்படி தூரமானது? ஆதியிலே, ஆதாம் ஏவாள் ஏதேனிலே தேவனுடைய சத்ததிற்கு கீழ்படியாமல், தங் களை பிசாசாவனுடைய வழிக்கு ஒப்புக் கொடுத்ததினால், தேவ மகிமையை இழந்து, நித்திய ஆக்கினைக்கு தங் களை ஒப்புக் கொடுத்து, பரலோகத்திற்கு பகைஞரானார்கள். தேவனுடைய ராஜ்யம் அவர்களுக்கு தூரமானது. 'அக்காலத்திலே இயேசு கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிப்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக் கொள்ளுங்கள். முன்னே தூரமாயிருந்த நீங் கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.' அதாவது, நமக்கு அடைந்து கொள்வதற்கு சாத்தியமற்றதாக இருந்த தேவ ராஜ்யமானது, மீட்பராகிய இயேசு கிறிஸ்து வழியாக சாத்தியமாயிற்று. 'எப்படியெனில், அவரே நம்முடைய சமாதானகாரராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிர மாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமா தானம் பண்ணி, பகையை சிலுவையினால் கொன்று, அதினாலே இருதி றத்தாரையும், ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.' (எபேசியர் 2ம் அதிகாரம்). எனவே, நாம் நன்றாக புசித்து, குடித்து, சுகபோகமாக வாழ்ந்து, நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று கூறியும், ஆத்துமா கெட்டுப் போனால் அதனால் உண்டாகும் ஆதாயம் ஒன்றுமில்லை. ஆத லால், நாம் ஜெபிக்கும் போது, எப்பொழுதும், நித்தியமானதை வாஞ் சித்து, நாடித் தேட வேண்டும். அதை நாம் அடைந்து கொள்ளமுடி யாதபடிக்கு தேவ ராஜ்யமானது, அதிக தூரத்திலில்லை. தேவ ராஜ்யம், கிறிஸ்து வழியாக நமக்கு சமீபமாகவே இருக்கின்றது.

ஜெபம்:

நித்தியமானதை சுதந்தரித்துக் கொள்ளும்படி என்னை அழைத்த தேவனே, புசித்து, குடித்து, சுகபோகமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தைவிட்டு, உம்முடைய ராஜ்யத்தை ஆர்வத்துடன் தேட கிருபை செய்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 3:2