புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 06, 2025)

பரலோகத்திலே வீற்றிருக்கின்றவர்!

சங்கீதம் 2:11

பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.


ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்த மும், அவர்களைக் கண்டிக்கிறத ற்கும், ஆயிரமாயிரமான தமது பரி சுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித் தான். (யூதா 1:14-15) ஜாதிகள் கொந் தளித்து, ஜனங்கள் விரு தாக்காரியத்தைச் சிந்திப்பானேன்? கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோத மாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி: அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள். இவர்கள் தேவன் யார் என்று அறியாமலும், அவருடைய மத்துவத்தையும், பரிசுத்தத்தையும் உணராதபடிக்கு தங்கள் மனதை கடினப்கடுத்திக் கொண்டு, அவருடைய நீடிய பொறுமைய அசட்டை செய்கின்றார்கள். அவர் கொடுத்திருந்கும் திறந்த அதி சிறந்த பரலோக அழைப்பிதலின் மேன் மையை அறியாமல், தங்கள் மனம்போன போக்கி வாழும்படிக்கு, தங் கள் துன்மார்க்கமான வழிகளிலே நின்று கொண்டு, சர்வ வல்லமை யுள்ள தேவனாகிய கர்த்தர் ஏற்படுத்தின மெய்யான ஒரே வழியை பரி யாசம் செய்கின்றார்கள். என்னுடைய தகப்பனார், அவருடைய தகப் பனார், அவர்களுடைய முன்னோர்கள் எல்லாரும், இன்பமாய் வாழ் ந்து, கடந்து போனார்கள். நானும் அவ்வழியே போவேன், காரியங்கள் அன்றிருந்தது போலேவே இன்னும் இருக்கின்றது என்று கூறி தேவ த்துத்தையும், அவருடைய இரட்சிபின் செய்தியையும் நகைக்கின்றா ர்கள். பரலோகத்திலே வீற்றிருக்கின்றவர் இதை அறியாரோ? உன்னதமானவருக்கு இவைகள் மறைவாயிற்றோ? இல்லை. பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார். முலை களே, எங்கள் மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லும் இவர்கள் மேல் வரும். அந்த நாள்வரும் முன் பரலோகத்திருக்கின்றவரின் அழைப்பை ஏற்று அவர் ஏற்படுத்திய ஒரே வழியில் நடக்கின்றவன் பாக்கியவானாக இருப்பான்.

ஜெபம்:

மகத்துவமும் பரிசுத்தமுமுள்ள பரலோக தேவனே, நான் இப்படி ப்பட்ட தேவனை அப்பா பிதாவே என்று அழைக்கதக்கதாய் பெற்றிருக்கும் பாக்கியத்தை உணர்ந்து கொள்ளும் இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 23:27-31