புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 31, 2025)

கருத்தோடு ஜெபம் செய்யுங்கள்

யோவான் 4:24

தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழு துகொள்ளவேண்டும் என்றார்.


சில நாடுகளிலே, மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, தவ றாமல் காலை, மாலை, மதிய வந்தனங்களை ஒருவருக்கொருவர் தெரி வித்துக் கொள்வார்கள். சிலர் ஒருவரை ஒருவர் சுகம் விசாரிப்பர்கள். ஆனால், அதை அநேகர் கருத்தோடு செய்யாமல், அர்த்மில்லாமல் முகஸ்திக்காக செய்து, மிக வேகமாக கடந்து சென்று விடுவார்கள். வந்தனைகளை கூறிக்கொள்வது ஒரு நற்பண்பு ஆனால் முகஸ் திகாக செய்வது கருத்தற்றதாக இருக்கும். நாளாடைவிலே அவை கள் ஒரு அர்த்தமற்ற வாழ்த்து க்கள் என்று யாவரும் அறிந்து கொள்வார்கள். ஆனாலும், கலாச் சாரம் அப்படியாக இருப்பதால், ஒரு கிளிப்பிள்ளையைப் போல அதை செய்து கொள்வார்கள். இத்தகைய வாழ்த்துக்கள் ஒரு மரபைப் போல, வாழையடி வாழையாக, சந்ததி சந்ததியாக கடந்து செல்கின் றது. எனினும், அவர்கள் மத்தியிலும் கருத்தோடு வந்தனைகளை கூறி, வாழத்துகின்ற ஒரு சிலர் இருக்கின்றார்கள். இவ்வண்ணமாக ஜெபங்க ளும் ஏறெடுக்கப்பட்டு வருகின்றது. கற்பித்து கொடுக்க சரி யான போத கர்கள் இல்லாததால், சிலர் தாங்கள் செய்வது இன்ன தென்று அறி யாமல், தங்கள் முன்னோர்கள் செய்தார்கள், எனவே நாங் களும் செய்கிள்றோம் என்று, ஒரு சங்கிலித் தொடரிலே, ஜெபத்தை கூறிவிட்டு சென்று விடுகின்றார்கள். அந்த ஜெபத்தின் காரணம் என்ன? கூறிய வைகளின் கருப்பொருள் என்ன? என்று சிந்திப்பதற்கு எண்ணமோ, நேரமோ இல்லை. அவர்கள் வழிநடத்த நியமிக்கப்பட்டவர்களும், இவை களை குறித்து அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதில்லை. இன்னும் சிலர், தங்கள் வாழ்விற்கும், ஜெபத்திற்கும் சம்மந்தம் இல்லை என்று அறிந் திருக்கின்ற போதும், தங்கள் பொல்லாத வழிகளை மாற்ற மனதில்லா மலும், ஆலோசனைகளை கேட்காமல், தங்கள் கண்போன போக்கிலேயே வாழ்க்கின்றார்கள். எனவே, கர்த்தருடைய சமுகத்திலே வரும்போது, வேதனை உண்டாக்கும் வழிகள் நம்மிடத்தில் இருக்கின்றதா என்று ஆரா ய்ந்து பார்த்து, அவற்றை மேற்கொள் ளும்படிக்கு, தேவ ஆவியான வரின் துணையை உண்மையுள்ள மனதோடு நாடும் போது, அவர் நாம் தப்பித்துக் கொள்ளும் போக்கை உண்டாக்குவார். பிரியமானவர்களே, மனம்த திரும்ப வேண்டும் என்ற எண்ணத்துடன், உங்கள் இருதயங்ளை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் உண்மை நிலையை கர்த்தரித்திலே தெரியங்படுத்துங்கள்.

ஜெபம்:

என் நிலைமையை நன்றாக அறிந்த தேவனே, நான் அதை உணர்ந்தவனாக, மனத்தாழ்மையோடு, உம்முடைய சமுத்திற்கு வந்து, வேத னை உண்டாக்கும் வழிகளைவிட்டுவிட நீர் எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 59:1-2