தியானம் (வைகாசி 24, 2025)
தனித்திருந்து பிதாவை நோக்கி பாருங்கள்
1 பேதுரு 5:7
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த பெற்றோரனவர்கள், தங்கள் மகளானவளோடு கூட, தங்கள் உறவினரின் விசேஷ தினமொன்றின் விருந்திற்காக அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தார். சற்று நேரம் சென்ற பின்னர், மக ளானவள், தனக்கு தலையிடியாக இருக்கின்றது வீடு செல்ல வேண்டும் என்றாள். அதற்கு தயானவள், தலையிடிதானே, சற்று பொருத்திரு, நாங்கள் உணவு உண்டபின் வீடு திரு ம்பலாம் என கூறினாள். அங்கிருந்து சிலர் அவர்களின் சம்பாஷனைணை கேட்டுக்கொண்டிருந்ததால், மகளான வள், தயக்கத்தோடு, ஆம் என்று கூறிவிட்டு, பெற்றோருக்காக காத்தி ருந்தாள். அன்றிரவு, அவர்கள் வீடு திரும்பியதும், மகளானவள், தாங்க முடியாத தலைவலியினாலே, தன் பெற்றோர் முன்னிலையில் அழ ஆரம்பித்தாள். அவனுடைய வேதனை யை கண்ட தகப்பனானவர், மகளே, நீ ஏன், இவ்வளவு கடுமையாக இருக்கின்றது என எங்களுக்கு முன்பு கூறவில்லை என்று கேட்டாள். அதற்கு மகளானவள்: என சக வயதையுடவர்கள் அங்கிருந்ததால், அவ ர்கள் முன்னிலையில் திறந்த மனதோடு பேச முடியாமல் இருந்தது எனக் கூறினாள். பிரியமான சகோதர சகோதரிகளே, நாமும் சிலவே ளைகளிலே, சிறு குழுக்களாக அல்லது சபையாக சேர்ந்து நம்மு டைய பரலோக பிதாவிடம் ஜெபிப்பதுண்டு. அவ்விடங்களிலே, திறந்த மன தோடு, சுதந்திரமாக, உங்கள் மனதின் கிலேசங்களை தேவனிடம் தெரி விக்கக்கூடுமோ? பிள்ளைகள் உடல சுகவீனம் அடையும்போது, மருந் துகள் எடுத்திருந்தாலும், தங்கள் வருத்தங்களை தங்கள் பெற்றோரிடம் கூறி, அவர்கள் அருகே ஒட்டிக் கொண்டு இருந்து விடுகின்றார்கள். பெற்றோர் அவர்களை தேற்றும்போது, வருத்தங்கள் முற்றாக மாறும் வரைக்கும் அவர்கள் ஆறுதல் அடைகின்றார்கள். அதுபோலவே, நாமும், தனித்திருந்து, அந்தரகத்திலிருக்கின்ற நம்முடைய பிதாவை நோக்கி பார்க்கும் போது, அவர் சமுயத்திலே எங்கள் இருதயத்தின் நோவு களை அவரிடம் கூறி, அவர் சமுகத்திலே ஆறுதல்அடைந்து கொள்ள லாம். நாம் பெற்றோரோடு நல்உறவு பாராட்டுவதைப் போல, நாமும் தனித்திருந்து பிதாவின் உறவிலே வளர்ந்து பெருக வேண்டும். கிறிஸ்து இயேசு வழியான அவரிடம் சேரும் பாக்கியத்தை நாம் பெற்றிருக்கி ன்றபடியால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டை யிலே சேரக்கடவோம்.
ஜெபம்:
உம் வார்த்தையால் என்னை ஆற்றி, தேற்றி நடத்தும் தேவனே, உம்மிடம் சேரும்படிக்கு, நீர் எனக்கு கொடுத்திருக்க இந்த பெரிதான பாக்கியத்திற்காக நன்றி. அதன் மேன்மை உணரும் இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 113:7