புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 23, 2025)

அக்கரமசிந்தை வேண்டாம்

சங்கீதம் 66:18

என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனினொருவன், தன் வாலிப நாட்களிலிருந்து பெற்றோரின் சொல்லை கனப்படுத்தாது வாழ்ந்து வந்தான். அதாவது, ஒரு போதும் அவன் தன் பெற்றோருக்கு எதிர்த்து பேசுவதில்லை. அவர்கள் சொல்வதை கேட்டுவிட்டு, அவர்களிடம் இருந்து தனக்கு தேவையானதை பெற்றுக் கொண்டு, வெளியே சென்று, தன் விருப்பங்களை செய்து வந்தான். காலங்கள் சென்று, அவன் திருமணமாகிய பின்பும், தவறாமல் வாரந்தோறும் தன் பெற்றோரை சந்திக்க செல்வது அவனுக்கு வழக்கமாக இருந்தது. பெற்றோர் இருக்கும் வீட்டிலே, சில திருத்த வேளைகளை செய்துவிட்டு, அவர்கள் சுக நலன் களை விசாரித்துபின்பு, அவ்வவ்போது, அவர்களிடம் உதவியை பெற்றுக் கொண்டு சென்றுவிடுவான். அவனுடைய போக்கிலே திருத்தம் இல்லை. தன் செய்கைகளை குறித்து மனம் வருந்துவதில்லை என்ற காரியமானது பெற்றோருக்கு மனவருத்தத்தை கொடுத்து வந்தது. ஆண்டுகள் சென்ற பின்னர், அவனுடைய சிந்தை தவறானது என்பதையும், அவனுடைய மனதிலே உண்மை இல்லை என்பதையும் நன்கு அறிந்து கொண்ட பெற்றோர். அவன் கேட்கும் காரியங்களுக்கு செவிகொடாது போனார்கள். ஒருநாள், அவன் வாழ்க்கையிலே, அவன் செய் கையினால் ஏற்பட்ட விபரீதத்தினால், அவன் எப்பக்கமும் நெருக்கப்பட்டான். தன் பரிதாப நிலையை உணர்ந்து மனவருத்தப்பட்டான். பெற்றோரிடம் சென்று தன் அக்கிரம செய்கைகளுக்காக மன்னிப்பு கேட் டான். அவனுடைய தாழ்விலே அவன் கூக்குரலைகேட்ட பெற்றோர், விரைந்து சென்று அவனுக்கு ஆதரவாக இருந்தது, அவனுக்கு உதவி செய்தார்கள். 'தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன். அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார். என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார். மெய்யாய் தேவன் எனக் குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். என் ஜெப த்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. (சங் 66:20). ஆம் பிரிய மானவர்களே, உங்கள் சிந்தையிலே அக்கிரம செய்கைகள் இருக்குமா யின், முதலாவதாக பிதாவின் சித்த்தை செய்யும்படிக்கு உண்மையாக ஒப்புக் கொடுங்கள். தேவ ஆவியானவர்தாமே உதவி செய்வார்.

ஜெபம்:

அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்த தேவனே, நான் மறுபடியும் அக்கிர சிந்தையுள்ளவனாக மாறிவிடாதபடிக்கு எனக்கு உணர்வுள்ள இருயதத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத் 7:21-23