தியானம் (வைகாசி 21, 2025)
ஆவியோடும் உண்மையோடும்
யோவான் 4:24
தேவன் ஆவியாயிருக்கி றார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும் என்றார்.
'நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.' (மத்தேயு 6:6)என்று ஆண்ட வராகிய இயேசு ஜெபத்தை குறித்து கூறியிருக்கின்றார். அப்படியா னால், நான் வெளி இடங்களிலே ஜெபி க்கக்கூடாதா? சபையாhக கூடி ஜெபித் தால் தேவன் அந்த ஜெபத்திற்கு பலன் இல்லையோ? ஆண்டவராகிய இயேசு, எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களு க்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார். அவ ர்கள் திரும்பி வந்த நடந்த சம்பவங் களை கூறியபோது: 'அந்த வேளை யில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரி க்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுள த்துக்குப் பிரியமாயிருந்தது' என்று அவர்கள் முன்னிலையிலே ஜெபம் பண்ணினார். (லூக்கா 10:21). அப்போஸ்தலனாகிய பேதுரு, ஏரோதி னால் கைது செய்யப்பட்டு கடும் காவலிலே வைக்கப்பட்ட போது, அற் புதவிதமாக தேவனாலே விடுதலை பண்ணப்படார். அந்த வேளையிலே, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தார்;;. அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிரு ந்தார்கள். (அப் 12). இப்படியாக வெளி இடங்களிலும், சபைகளிலும் பல ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டதையும், அவைகளுக்கு தேவ வழிட த்ததுதலும், பதிலும் கிடைத்ததை நாம் வேதத்திலே காணலாம். மேலும், ஆண்டவராகிய இயேசு, சமாரிய ஸ்திரியோடு பேசும் போது, அவளை நோக்கி: 'உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவி யோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது. தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.' என் றார். ஆம் பிரியமானவர்களே, நாம் சபையாக கூடி வந்து ஜெபிக்கும் நேரங்கள் உண்டு. ஆனால், நாம் தனிந்திருந்து தேவனோடு உறவாடும் நேரம் இன்றியமையாதது என்பதை அறிந் கொள்ள வேண்டும்.
ஜெபம்:
உண்மையுள்ள இருதயத்தை தள்ளாத தேவனே, நான் ஏறெடுக்ககும், ஜெபங்கள் உமக்கு பிரியமுள்ளதாக இரக்கும்படி, ஆவியோடும் உண்மையோடும் நான் உம்மை சேவிக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோனா 2:1-10